ரஜினியோட மோத நினைச்சேன்!. ஆனா மிஸ் ஆயிடுச்சி!.. லிங்குசாமிக்கு வந்த விபரீத ஆசை!..

Published on: October 27, 2023
lingusamy
---Advertisement---

Lingusamy: ஆனந்தம் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ் தேவயாணி, ரம்பா, சினேகா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்குனர் விக்ரமன் ஸ்டைலில் படம் இருந்ததால் அதுபோன்ற படத்தை லிங்குசாமி தொடர்ந்து எடுப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அடுத்து அவர் எடுத்தது ஒரு பக்கா ஆக்‌ஷன் படம். மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோரை வைத்து ரன் படத்தை எடுத்தார். அந்த படமும் சூப்பர் ஹிட். அடுத்து அஜித்தை வைத்து ஜி படத்தை எடுத்தார். இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அடுத்து விஷாலை வைத்து அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…

இந்த படம் விஷாலையும் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அடுத்து விக்ரமை வைத்து பீமா படம் எடுத்தார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, தோல்வியில் முடிந்தது. அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய படம்தான் பையா. இப்படத்தில் தமன்னா நடித்திருந்தார்.

அடுத்து வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கினார். 3 படங்களுமே ஓடவில்லை. தெலுங்கில் வாரியர் எனும் படத்தை இயக்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. எனவே, அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்கவேண்டும் என கதை எழுதி வருகிறார்.

இதையும் படிங்க: ‘வெளியே போ’ என விரட்டிய நடிகர்!. குமுறி குமுறி அழுத இயக்குனர் லிங்குசாமி!…

ஒருபக்கம் ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார். தனது இரண்டாவது படமான ரன் படத்தை இயக்கிய அனுபவம் பற்றி பேசிய லிங்குசாமி ‘பையா படம் தயாரனபோது ரஜினி சாரின் பாபா படமும் ரிலீஸுக்கு ரெடியாக இருந்தது. அந்த படம் வெளியாவதால் புதிய படங்கள் வெளியாகவில்லை. எனவே, ரன் படத்தை வெளியிடலாம் என நினைத்தேன். ‘ரஜினி படத்தோடு ரஜினி ரசிகனின் படமும் ரிலீஸ்’ என விளம்பரம் கொடுக்க நினைத்தேன்.

இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர் சிரித்தார். அப்படி வெளியிட்டால் ஒரு லாபமும் வராது வேண்டாம் என சொல்லிவிட்டார். எனவே, பாபா படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரன் படத்தை ரிலீஸ் செய்தோம் என லிங்குசாமி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: யாருக்கோ விரித்த வலை!.. கமலால் படாதபாடு பட்ட லிங்குசாமி!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.