Connect with us
lingusamy

Cinema History

‘வெளியே போ’ என விரட்டிய நடிகர்!. குமுறி குமுறி அழுத இயக்குனர் லிங்குசாமி!…

Actor mammootty: ஆனந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. 4 சகோதரர்கள் பாசத்துடன் ஒன்றாக வாழும் கதைக்கு அழகாக திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தில் மம்முட்டி மூத்த அண்ணனாகவும், முரளி, அப்பாஸ், ஷ்யாம் கணேஷ் ஆகியோர் அவரின் தம்பியாக நடித்திருந்தனர்.

மேலும், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், சினேகா, தேவயானை, ரம்பா என அப்போதைய 3 கதாநாயகிகள் நடித்திருந்தனர். தம்பிகளுக்காவே எல்லாவற்றையும் யோசிக்கும் பக்குவமான அண்ணனாக மம்முட்டி இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதையும் படிங்க: அஜித் சொல்லித்தான் அந்த படத்தில் நடித்தேன்!.. பல வருடங்கள் கழித்து ரகசியம் சொன்ன ஜெய்!…

அதன்பின், மாதவனை வைத்து ரன், கார்த்தியை வைத்து பையா, அஜித்தை வைத்து ஜி, விஷாலை வைத்து சண்டக்கோழி, சூர்யாவை வைத்து அஞ்சான் என சில திரைப்படங்களை லிங்குசாமி இயக்கினார். அஞ்சான் படத்திலிருந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான எந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. ஆந்திரா பக்கம் போய் வாரியர் என்கிற படத்தையும் இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லிங்குசாமி ‘ஆனந்தம் படம் எடுக்கும்போது மம்முட்டி நடித்த காட்சிகளுக்கு டப்பிங் செய்து கொண்டிருந்தோம். அதில் ஒரு முக்கியமான காட்சியில் அவர் பேசியது எனக்கு திருப்தி இல்லை. மீண்டும் மீண்டும் அவரை பேச சொன்னதால் கோபமடைந்த அவர் என்னை ‘நீ வெளியே போ.. நீ இருந்தால் நான் பேசமாட்டேன்’ என சொன்னார்.

இதையும் படிங்க: இதனால்தான் லியோ படத்தில் நடிக்கவில்லை!.. ரிலீஸுக்கு பின் உண்மையை சொன்ன விஷால்…

நானும் வெளியே போய் நிற்பேன். அதன்பின் பேசிவிட்டு என்னை கேட்க சொல்வார். எனக்கு திருப்தி இல்லை எனில் மீண்டும் என்னை வெளியே போக சொல்லுவார். இப்போது இதை சாதாரணமாக சொல்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் அழுதிருக்கிறேன். ஆனால், படம் வெளியாகி ஒரு வார இதழில் அந்த காட்சியில் மம்முட்டி சார் பேசிய வசன உச்சரிப்பை குறிப்பிட்டு பாராட்டி எழுதியிருந்தனர்.

ஆனந்தம் எனக்கு முதல் படம் என்பதால் அப்படத்தில் நடித்த எல்லோருமே எனக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்தனர். அந்த படத்தின் கேரள உரிமையை மம்முட்டி வாங்கி வெளியிட்டார். அப்படம் அவருக்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது’ என லிங்குசாமி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ‘கைதி 2’வைத் தொடர்ந்து கார்த்தியின் அந்தப் படமும் இரண்டாம் பாகமா? போடு அடுத்த மரண பயத்தை காட்ட வராரே

google news
Continue Reading

More in Cinema History

To Top