Connect with us
rajini

Cinema News

தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த படம்- ஐயா தலைவரே! தெரிஞ்சுதான் சொன்னீங்களா? லியோ குறித்து ரஜினி கருத்து

Rajini about Leo:  நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. வசூலில் சாதனை படைத்து வருகிறது. கிட்டத்தட்ட461 கோடி வரை வசூல் செய்திருப்பதாக லியோ பட தயாரிப்பாளர் லலித் கூறினார்.

மேலும் இது பொய்யான தகவலும் இல்லை. இதுதான் உண்மை என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். மேலும் படம் ரிலீஸான முதல் நாள் அனைவருக்கும் முதல் பாதி பிடித்திருந்தது. இரண்டாம் பாதி கொஞ்சம் சரியில்லை என்று விமர்சனம் சொன்னார்கள்.

இதையும் படிங்க: ஆல் டைம் ப்யூட்டி குயின்மா நீ! கவர்ச்சியே பொறாமைப் பட வைக்கும் அழகில் சமந்தா

ஆனால் அதே ஆடியன்ஸ் இரண்டாம் நாளும் படம் பார்த்து இரண்டாம் பாதியும் பிடித்திருக்கிறது என்றுதான் கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் தீபாவளி வரை படம் திரையரங்கில் ஓடும் என்றும் லலித் கூறினார். இந்த நிலையில் ஏற்கனவே லியோ படம் பார்த்து ரஜினி மிக அருமையாக இருக்கிறது என்று கூறியதாக தகவல் வெளியானது.

இப்போது அதை நிரூபணம் செய்திருக்கிறார் லலித். படம் பார்த்த அடுத்த நாளே ரஜினி லலித்துக்கு போன் செய்து படம் பார்த்துவிட்டதாகவும் மிக அருமையாக வந்திருக்கிறது என்று கூறியதோடு மட்டுமில்லாமல் ப்ரடக்‌ஷன் வேலியூவும் பெரிதாக இருக்கிறது ,

இதையும் படிங்க: குட்டி ஸ்டோரியை சொல்ல ரெடியான விஜய்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்த ‘லியோ’ டீம்

தமிழ் சினிமா துறையில் இவ்ளோ ப்ரடக்‌ஷன் வேலியூவில் படமே வரவில்லை. இதுதான் முதல் படம் என்று கூறினாராம். மேலும்  ஜெயிலர் படத்தின் சமயத்திலும் லலித் ரஜினியை பார்க்க சென்றிருக்கிறார். போன இடத்தில் லியோ படத்தின் கதையை புட்டு புட்டு வைத்தாராம் ரஜினி.

அப்பவே சீன் பை சீன் லியோ கதையை சொல்லி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என ஜெயிலரில் நடிக்கும் போதே ரஜினி லியோ படத்தை பற்றி கூறியிருக்கிறாராம்.இதை மிகவும் பெருமையாக லலித் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: மகள் நிச்சயம் முடிந்த சந்தோஷத்தில் நம்ம ஹரால்டு தாஸ்! என்னமா ஸ்டைலா இருக்காரு பாருங்க

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top