ஹாஸ்பிடலில் நடந்த மெடிக்கல் மாஃபியா! ஒரு ட்ரையலுக்கு 25 லட்சமா? விக்ரமன் மனைவிக்கு நடந்த அநியாயம்

Published on: October 29, 2023
vikram
---Advertisement---

Vikraman Wife Treatment: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் விக்ரமன். பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உதவியவர். இன்று அவரின் மனைவிக்கு நடந்த அநியாயம் அனைவரையும் திகலடைய வைத்திருக்கிறது.

விக்ரமன் மனைவி அடிப்படையிலேயே ஒரு குச்சிப்புடி டான்ஸர். ஆடிக் கொண்டிருக்கும் போதே முதுகுவலி ஏற்பட மருத்துவமனைக்கு சாதாரணமாகத்தான் சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அது இதுனு சொல்லி ஏதோ ஏதோ மாத்திரைகள், சிகிச்சைகள் அளிக்க கடைசியாக திரும்ப வரும் போது நடக்க முடியாமல் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: SK 21 படத்திற்கு கறார் கண்டீசன் போட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! இது என்னடா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை?

கிட்டத்தட்ட 5 வருட காலம் படுக்கையிலேயே கிடக்கும் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா நேற்று ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். நான் மனதளவில் நன்றாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய கணவர்தான் ரொம்ப வீக் ஆயிட்டாரு என கூறி வருத்தப்பட்டார். மேலும் நான் இப்படி இருந்தாலும் என் கணவருக்கு தேவையானதை ஆள்களை வைத்து செய்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லும் போது கேட்கும் நமக்கு மனசு உருகிவிடுகிறது.

அதுமட்டுமில்லாமல் எனக்கு இருக்கிற ஒரே ஆசை என்னவெனில் என் ஒரே மகன் இப்பொழுது சினிமாவில் நடிகனாக மாறியிருக்கிறான். அவர் நடிக்கிறதை மட்டும் நான் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் நான் உயிரோடு இருக்கிறேன் என்று கூறும் போது மகன் மீது வைத்திருக்கும் பாசம் நம்மை கண்கலங்க வைக்கிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் க்ரியேட்டிவ் டீம் தான் அது… உங்க போட்டியாளர்களை நீங்களே அசிங்கப்படுத்தலாமா..? கடுப்பான ரசிகர்கள்..!

அதுமட்டுமில்லாமல் இரவு மாத்திரைகளை போட்டு உறங்கும் போது நாளை நான் என் பையனுக்காக உயிரோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதான் தூங்கச் செல்வாராம். என் பையனுக்கு நான்தான் ஒரே நம்பிக்கை என்றும் கூறி மெய்சிலிர்க்க வைத்தார்.

மேலும் மருத்துவமனையில் இப்போது மெடிக்கல் மாஃபியாதான் நடக்கிறது என்று கூறி என்னை பரிசோதிக்க வந்த இன்னொரு மருத்துவர் எனக்கு யூரின் சரியாக போகாததால் ஒரு சிப் மாதிரி வைத்து ஒரு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த பரிசோதனைக்கே 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறினாராம்.

இதையும் படிங்க: ஒரே நாளில் இத்தனை ஷாக்கா… இரண்டு அவுட்டு.. அஞ்சு எண்ட்ரி… ஆனா இது மட்டும் மாறாது போலயே..!

பரிசோதித்து ஒரு வேளை தோல்வியடைந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் அந்த சிகிச்சையை இவர் மேற்கொள்ளவில்லை.ஒரு புகழ்பெற்ற இயக்குனர் மனைவி என்பதால் எவ்வளவு வேண்டுமேனாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள் என்று அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் தான் இப்படி பில்லை போட்டு தீட்டுகின்றனர் என்பது மாதிரி ஜெயப்பிரியா கூறினார்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.