விக்ரமன் வீட்டில் ஒரே நேரத்தில் 15 மருத்துவர்கள்! தடாலடியாக பறந்த உத்தரவு – வைரலாகும் புகைப்படம்

Published on: October 30, 2023
vikraman
---Advertisement---

Director Vikraman : சமீபகாலமாக இயக்குனர் விக்ரமன் மனைவி குறித்த செய்திதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் விக்ரமனின் மனைவி ஜெயபிரியா உடல் நலம் குறித்து சமீபகாலமாக பல செய்திகள் வந்தன.

வடபழனியில் உள்ள ஒரு தனியார்  ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்ற போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் ஜெயபிரியாவால் நடக்க முடியாமல் போனதாக விக்ரமன் கூறினார். ஆனால் இதை பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும் தாங்கம் எதுவும் கேட்கவில்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இதென்ன லிப் லாக்? சிம்புவும் த்ரிஷாவும் அந்த சீனில் பண்ணிய அட்டகாசம் இருக்கே? உணர்ச்சிவசப்பட்டு என்னாச்சு தெரியுமா?

இதை பற்றி அவர் மனைவி கூறும் போது கேட்கும் போதெல்லாம்  இன்னும் கொஞ்ச நாளில் சரியாகி விடும் என்று கூறியதால் அதை நம்பிக்கொண்டே இத்தனை வருடங்களை கடந்து விட்டதாகவும் ஜெயப்பிரியா கூறினார்.

vik
vik

ஆனால் மருத்துவ செலவுக்காக பல லட்சங்களை இழந்து விட்டதாகவும் இருக்கிற இடங்களை விற்றுத்தான் மருத்துவ செலவுகளை கவனித்து வந்ததாகவும் விக்ரமன் கூறினார். இந்த நிலையில் இதை பற்றி விக்ரமன் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: மாலினி செய்த ஒரே நல்ல விஷயம் இதுதான்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்..! அடுத்தடுத்த திருப்பங்கள்..!

நடிகை விஜிக்கும் இதே பிரச்சினை நடந்த போது அதில் தலையிட்டு தீர்வு கண்டவர் கலைஞர் ஐயா. அதே போல் என் மனைவிக்கான மருத்துவ உதவியை ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இது ஸ்டாலின் காதுக்கு செல்ல அதிரி புதிரியாக விக்ரமன் வீட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மருத்துவ படைகளை திரண்டி கொண்டு சென்று அங்கு ஒரு 15 மருத்துவர்கள் கொண்ட குழு ஜெயப்பிரியாவை பரிசோதித்தனராம். அதன் பிறகு ஆக வேண்டிய சிகிச்சைகளை அளிப்பதாக முதல்வர் உத்தரவுப்படி மேற்கொள்ள இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: இது தான் கெட்ட நேரமோ..! 4 லட்சத்தினை உடனே கட்ட முடியாமல் திணறும் அண்ணாமலை குடும்பம்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.