Cinema News
பிரேமம் பட இயக்குனருக்கு இப்படி ஒரு திடீர் பாதிப்பா..? அரிய வகை பிரச்சனையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்
Alphonse Puthiran: தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே மக்களை வெகுவாக கவர்ந்தார். படமுழுக்க இளைஞர் பட்டாளத்தை கூட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்த படமாக நேரம் திரைப்படம் அமைந்தது.
இதே கூட்டணியோடு பிரேமம் என்ற ஒரு அழகான காதல் காவியத்தை படைத்தார்.பிரேமம் திரைப்படம் எத்தனை காலமானாலும் அழியாத பொக்கிஷ திரைப்படமாகவே ரசிகர்களிடம் மாறியிருக்கிறது. பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு கோல்ட் என்ற திரைப்படத்தை அல்போன்ஸ் இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: இனி எல்லா படத்துலையும் இது இருக்கும்… திட்டவட்டமாக சொன்ன லோகேஷ்.. இதை லியோவில் கவனிச்சீங்களா..?
ஆனால் அந்தப் படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியடையவில்லை. இதனை அடுத்து இப்போது கிஃப்ட் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அல்போன்ஸ்.இதற்கிடையில் திடீரென ஒரு அறிவிப்பை சமூக வலை தளங்களில்ப் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் அல்போன்ஸ்.
தான் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் எனக்கு autism spectrum disorder என்ற நோய் இருப்பதாகவும் கூறி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறார். ஆனால் பாடல்கள், குறும்படங்கள் இவைகளை இயக்குவதில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சிகரெட்டைப் பிடுங்கி எறிந்த சரத்பாபு… அவரையே பற்ற வைக்க வைத்த ரஜினி..!
இவரின் இந்த முடிவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்றும் தயவுசெய்து சினிமாவை விட்டு போகாதீர்கள் என்றும் தங்கள் கமெண்ட்களை கூறிவருகின்றனர்.சினிமாவில் என்றும் மறக்க முடியாத நேரம், பிரேமம் போன்ற அழகான திரைப்படங்களை கொடுத்த இயக்குனரின் இந்த முடிவால் பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.