தளபதியோட உத்தரவு! தீயாய் வேலை செய்யனும் குமாரு – ‘லியோ’ வெற்றிவிழா இப்படித்தான் நடக்கப் போகுது

Published on: October 31, 2023
vijay
---Advertisement---

Leo Success Meet:  நாளை நடக்கவுள்ள லியோ படத்தின் வெற்றிவிழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்து கொண்டிருக்கின்றன. எப்படியோ இந்த விழாவை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கிவிட்டது. விஜய் உட்பட திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் விஜய்க்கு தளபதியாக செயல்பட்டு வரும் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது நாளை எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்? ஏதாவது அசாம்பிவதம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இதையும் படிங்க: வாரே வா!.. வசூலில் இங்க நான் தான் ராஜா என நிரூபித்த விஜய்!.. லியோ 12 நாளில் இத்தனை கோடி வசூலா?..

ஒரு பக்கம் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள். அணித்தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் என பெரும்பாலானோர் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

காவல்துறை சுமார் 6000 பேருக்கு அனுமதி வழங்கியிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். காவல்துறை என்ன சொல்கிறார்களோ அதன் படியே நடந்து கொள்ள வேண்டும் என்று தளபதி விஜயும் உத்தரவை பிறப்பித்திருக்கிறாராம். தளபதி உத்தரவை மீறி எதையும் எங்கள் இயக்கம் செய்யாது.

இதையும் படிங்க: கதையே இல்லாமல் அஜித்தை நடிக்க அழைத்த இயக்குனர்… சரியான பாடம் சொல்லி கொடுத்த தல…

அந்தளவுக்கு விஜய் ரசிகர்களை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார் என புஸ்ஸி ஆனந்த் கூறினார்.மேலும் இரண்டு வகையான நிறங்களில் டேக் கொடுத்திருக்கிறார்களாம். அதைக் கையில் கட்டிக் கொண்டுதான் விழாவிற்கு வரவேண்டுமாம். அந்த டேக் இல்லாதவர்கள் விழாவிற்கு அனுமதிக்கமாட்டார்களாம்.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு லிங்கும் ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த லிங்க் வழியாகவே நாளை யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்களோ அவர்களின் பெயர், புகைப்படம் இவைகள் எல்லாம் அந்த லிங்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதாம். அதற்கான லிஸ்டும் புஸ்ஸி ஆனந்த் கையில்தான் இருக்குமாம். அதனால் வேறெந்த ஒரு அசாம்பாவிதம் நடக்க வாய்ப்பே இருக்காது என புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

இதையும் படிங்க: தனியா வந்தா ஆப்பு வச்சிருவாங்க! எதிராளியுடன் கூட்டணி வைத்த விஜய் – லியோ சக்ஸஸ் மீட்டில் யார் வராங்கனு தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.