Connect with us
ajithkumar

Cinema History

கதையே இல்லாமல் அஜித்தை நடிக்க அழைத்த இயக்குனர்… சரியான பாடம் சொல்லி கொடுத்த தல…

அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் மெதுவாக சினிமாத்துறையில் வெற்றியடைய ஆரம்பித்தார் நடிகர் அஜித்குமார்.

பொதுவாக அஜித்குமார் தான் ஒரு முன்னணி கதாநாயகனாக ஆன பின் தனது படத்தின் கதைகளுக்கு  மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பாராம். மேலும் இவர் அமர்களம் திரைப்படத்திலிருந்துதான் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். அப்பட வெற்றிக்குபின் இவர் தன்னை திரையில் அறிமுகப்படுத்தியவரான பூர்ணசந்திர ராவ் தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிக்க விரும்பினார்.

இதையும் வாசிங்க:லோகேஷ் பேட்டி பாத்தாத்தான் படம் புரியுமா?!.. என்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!…

இப்படத்தினை அஜித்துக்கு பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த அமர்க்களம் திரைப்படத்தின் இயக்குனரான சரண் இயக்கவிருந்தார். அப்படத்திற்கு வைக்கப்பட்ட பெயர்தான் ஏறுமுகம். இதற்கான பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் அதே சமயம் அஜித் தனது ரெட் திரைப்படத்தில் நடிக்க தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த சமயத்தில் அஜித் அதை எதையுமே கருத்தில் கொள்ளவில்லை. பின் ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஏன் சரணின் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பதற்கான பதிலை அளித்தார். அதன்படி அஜித் சரணிடம் சென்றபோது சரண் படத்தின் பாதி கதையை மட்டுமே தயாராக்கியுள்ளார். மீதி கதையை பற்றி அஜித் கேட்டபோது இயக்குனர் சரண், அதை அப்போது பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளார். முழு கதையையும் தயார் செய்யாததாலேயே அஜித் அதில் நடிக்க ஆர்வம் காட்டாமல் ரெட் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையும் வாசிங்க:KH234 படத்தில் ஒருவழியா ஹீரோயினை புடிச்சுட்டாங்கய்யா! ஆனால் மணிரத்தினத்திற்கு செட் ஆகாதே

இவ்வாறு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அஜித்தின் மீது தற்போது பல வித கருத்துகள் வதந்திகளாக பரவுகின்றன. அஜித் தற்போது நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒழுங்காக வரவில்லை எனவும் இதனால் படம் தாமதமாகிறது எனவும் பலவித கருத்துகள் உலாவின. ஆனால் அஜித் என்றைக்கும் தயாரிப்பாளருக்கோ அல்லது படத்தினை இயக்கும் இயக்குனருக்கோ தன் பக்கத்தில் இருந்து எந்த வித தொந்தரவும் தரமாட்டாராம்.

மேலும் அஜித் சினிமாவில் நடிப்பதற்கு என்றைக்கும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். நாம் நமது செயல்களை சரியாக செய்தால் அதற்கான பலன் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற விஷயத்தில் உறுதியாக இருப்பவரும் கூட.

இதையும் வாசிங்க:தனியா வந்தா ஆப்பு வச்சிருவாங்க! எதிராளியுடன் கூட்டணி வைத்த விஜய் – லியோ சக்ஸஸ் மீட்டில் யார் வராங்கனு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top