KH234 படத்தில் ஒருவழியா ஹீரோயினை புடிச்சுட்டாங்கய்யா! ஆனால் மணிரத்தினத்திற்கு செட் ஆகாதே

0
611
kamal
kamal

KH234: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராக இருக்கிறது.அதற்கான பூஜைதான் சமீபத்தில் போடப்பட்டது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார். நாயகன் படத்திற்கு பிறகு கமலும் மணிரத்தினமும் இணைந்து பணியாற்றும் திரைப்படமாக இது அமையும்.

அதனால் இவர்கள் கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. தற்போது கமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக் எச்.வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த கூட்டணி நவம்பரில் படப்பிடிப்பை ஆரம்பிப்பதாக செய்திகள் வந்தன.

இதையும் படிங்க: லோகேஷ் பேட்டி பாத்தாத்தான் படம் புரியுமா?!.. என்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!…

ஆனால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நீண்டுகொண்டே போவதால் எச்.வினோது படமும் கொஞ்சம் தள்ளி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.இதற்கிடையில் கமல் மணிரத்தினம் படத்தில் கமலுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆர்மபத்தில் இருந்தே த்ரிஷா பெயர்தான் அடிபட்டு வந்தது.அதன் பின்னர் நயன்தாராவும் ஒரு வேளை நடிக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் சமீபத்தில் வந்த தகவலின் படி த்ரிஷா மற்றும் நயன் ஆகிய இருவரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்களாம்.

இதையும் படிங்க: அம்மா நடிகையுடன் டச்சிங் டச்சிங்கில் அந்த தயாரிப்பாளரா? விஷயம் தெரிஞ்சு டெரரான அந்த நடிகை

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைக்கு சம்பளமாக 12 கோடி கொடுக்கப்படும் என்றும் இதன் மூலம் நடிக்கும் நடிகைதான் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கருதப்படுவார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இப்போது இரண்டு நடிகைகளும் நடிப்பதால் சம்பளம் பற்றி இதுவரை எந்த பேச்சும் வெளிவரவில்லை. ஆனால் த்ரிஷாவை பற்றி கவலையில்லை. நயனை வைத்து மணிரத்தினம் என்ன பாடு படப் போகிறாரோ என்ற கவலையும் கோடம்பாக்கத்தில் எழுகின்றது.

இதையும் படிங்க:போதும் இதோட நிறுத்திக்கோ!.. டிரெஸ்ஸ குறைச்சிக்கிட்டே போகும் காவ்யா அறிவுமணி…

ஏனெனில் குழந்தைகளுக்கு பிறகு நயன் சரியான 5 மணி ஆனதும் நான் வீட்டுக்கு போக வேண்டும். அதனால் என்னுடைய போர்ஷனை முதலில் வேகமாக எடுத்துவிடுங்கள் என கறார் காட்டி வருகிறாராம் நயன். இது மணிரத்தினத்திற்கு செட் ஆகுமா?  என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருக்கின்றன.

google news