லோகேஷ் பேட்டி பாத்தாத்தான் படம் புரியுமா?!.. என்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!...
Lokesh kanagraj: தமிழ் சினிமாவில் செல்வராகவன், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் தங்களின் படங்களில் சிலவற்றை ரசிகர்களுக்கு தெளிவாக சொல்லாமல் மறைமுகமாக, அதாவது அவர்களின் பாஷையில் ஹிட்டன் லேயர், டீக்கோடிங் என சிலவற்றை வைத்து படமெடுக்கிறார்கள்.
இது எல்லோருக்கும் புரியுமா என்றால் நிச்சயம் புரியாது. அதுவும் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் அந்த படத்தின் அடுத்த பாகத்திற்கு தொடர்புள்ள காட்சிகளை எல்லாம் வைத்து விடுகிறார். கேட்டால் அது ஹிட்டன் லேயர், டீக்கோடிங் என ரசிகர்கள் அடித்துவிடுகிறார்கள்.
இதையும் படிங்க: இந்த வசனத்தை நான் பேச மாட்டேன்!.. 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு செய்த ஆர்ப்பாட்டம்!..
விஜயை வைத்து லோகேஷ் இயக்கி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளான லியோ படத்தில் நிறைய காட்சிகள் ரசிகர்களுக்கு புரியவில்லை. லியோவான விஜயே தன்னை பார்த்திபன் என எல்லா இடத்திலும் சொல்கிறார். இதுவே ரசிகர்களை குழப்பிவிட்டது. அவர் உண்மையில் லியோவா, பார்த்திபனா என படம் பார்த்த பலருக்கும் புரியவில்லை.
இதுபற்றி பேட்டி கொடுக்கும் லோகேஷ் சில விஷயங்களை சொல்லி அது ஹிட்டன் லேயர்... டீக்கோடிங் என சொல்ல பலரும் அதையும் திட்டி வருகிறார்கள். விஜயின் உடலில் குண்டு இல்லை. எனவே, அவரை பார்த்திபன் என்றே கவுதம் மேனன் என நினைத்தார் என அவர் சொல்ல அதுவும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: இனி எல்லா படத்துலையும் இது இருக்கும்… திட்டவட்டமாக சொன்ன லோகேஷ்.. இதை லியோவில் கவனிச்சீங்களா..?
சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘படித்தவனோ.. பாமரனோ. ஒரு படமெடுத்தால் அது எல்லோருக்கும் புரிய வேண்டும். ஆனா, இயக்குனர் ஒவ்வொரு யுடியூப் சேனலா உட்கார்ந்து நான் இதை நினைச்சு எடுத்தேன்.. அத நினைச்சு எடுத்தேன்னு சொல்றத எப்படி எடுத்துக்கொள்வது?.. பேசாம, லியோ படம் பார்த்த எல்லாரையும் தியேட்டருக்கு வரவச்சி இவரோட பேட்டிய ஒளிபரப்பலாம். என்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை?’ என பதிவிட்டுள்ளார்.
அவரின் கருத்தை பலரும் ஆமோதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லியோ, ஜெயிலர்லாம் வேஸ்ட்!.. நிஜமாவே இந்த படங்கள் தான் கெத்து!.. ப்ளூ சட்டை மாறன் போட்டு பொளக்குறாரே!..
COPYRIGHT 2024
Powered By Blinkcms