லியோ, ஜெயிலர்லாம் வேஸ்ட்!.. நிஜமாவே இந்த படங்கள் தான் கெத்து!.. ப்ளூ சட்டை மாறன் போட்டு பொளக்குறாரே!..

இந்த ஆண்டு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் தளபதி விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்கள் 500 கோடி வசூலை 2 வாரங்களிலேயே அள்ளினாலும், அதற்கு மேல் அந்த படங்களை பார்க்க தியேட்டருக்கு ஆடியன்ஸ் வருவதே இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் 175 நாட்கள், 100 நாட்கள் என ஓடுவது வழக்கம். இப்போதெல்லாம் ஒரு சில படங்களை தவிர்த்து ஒட்டுமொத்த படங்களும் ஒரு வாரத்தை தாண்டுவதில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் நீ வேறலெவல்!.. ரேஷ்மாவிடம் மயங்கும் புள்ளிங்கோ!..

50 நாட்கள் இந்த காலக்கட்டத்தில் ஓடினால் தான் அது உண்மையாகவே நல்ல படம் என ப்ளூ சட்டை மாறன் புதிதாக ஒரு ட்வீட் போட்டு ஜெயிலர் மற்றும் லியோ என இரு படத்தையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார்.

”ப்ளாக் டிக்கட் விற்காமல், ஆடியோ லாஞ்சில் காக்கா கதை சொல்லாமல், பாடல்களில் 'பட்டத்தை புடுங்கறாங்க' என்று புலம்பாமல், 80% ஷேர் கேட்டு அலையாமல், நான் ரெடி போஸ்டர் அடி என அரசியல் காமடி செய்யாமல்..

நின்று நிதானமாக 50 நாட்கள் வரை ஓடி உண்மையாக வென்ற படங்கள்:

டாக்டர், மாநாடு, விக்ரம், பொன்னியின் செல்வன் 1, லவ் டுடே etc.” என ட்வீட் போட்டு ஜெயிலர் மற்றும் லியோ படங்கள் 10 நாட்களுக்கு பிறகு சரியாக ஓடவில்லை என்பதை குத்திக் காட்டி உள்ளார்.

இதையும் படிங்க: ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் டிடி பார்த்த வேலை! கடுப்பாகி உட்கார்ந்த கார்த்தி

ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக வச்சு செய்து ஏகப்பட்ட இம்பிரஷன்களை வாங்கி எக்ஸ் தளத்தில் நல்ல வருமானத்தை ப்ளூ சட்டை மாறன் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story