இந்த வசனத்தை நான் பேச மாட்டேன்!.. 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு செய்த ஆர்ப்பாட்டம்!..
Actor vadivelu: ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக உயர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கு வைகைப்புயல் என்கிற அடைமொழியும் கிடைத்தது. பெரும்பாலும் கிராமத்து கதைகொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்த காமெடி நடிகர் இவர்.
அதனால்தான் பட்டிதொட்டியெங்கும் இவர் பிரபலமானார். தமிழ் சினிமாவில் பெரும்பலான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். கவுண்டமணி போல ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என சம்பளம் வாங்கினார். படத்தின் வெற்றிக்கு வடிவேலு காமெடி தேவைப்பட்டதால் வடிவேலுவின் அலப்பறைகளை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பொறுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: வடிவேலு தூக்கியெறிந்த காமெடி நடிகர்… சரியான அங்கீகாரத்தை கொடுத்து உதவிய மணிவண்ணன்…
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து 2006ம் வருடம் வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படத்தின் பல காட்சிகள் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது. இப்படத்தின் வசனங்கள் அவ்வளவு நகைச்சுவைத்தன்மையோடு எழுதப்பட்டிருந்தது.
இந்த படத்தின் ஒரு காட்சியில் ஜோதிடராக வரும் வி.எஸ்.ராகவன் ‘நீங்கள் இருவரும் சேர்ந்துவிடுவீர்கள் என்பது எனக்கு தெரியும்’ என ஒரு வசனம் பேசுவார். எப்படி என ஸ்ரீமன் கேட்டதும் ‘இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்வது’ என சொல்லுவார். ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்த காமெடி அது. ஏனெனில், சினிமாவில் வசனம் பேசும் ஒருவர் அந்த சினிமாவையே கிண்டலடித்திருப்பார்.
இதையும் படிங்க: வளர்த்துவிட்ட இயக்குனரையே காலவாறிய வடிவேலு… பின்ன சாபம் சும்மா விடுமா?…
‘சினிமாவை நாமே எப்படி கிண்டலடிக்கலாம்.. ரசிகர்களுக்கு பிடிக்காது.. இந்த வசனம் வேண்டாம்’ என வடிவேலு சிம்புதேவனிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், வி.எஸ்.ராகவன் ‘வசனம் நல்லா இருக்கு. ஒன்னு எடுத்து வசிக்குவோம். பின்னாடி தேவை இல்லனா சேர்க்க வேண்டாம்’ என சொல்ல வடிவேலுவும் அரைமனதாக சம்மதம் சொல்லியிருக்கிறார்.
படம் ரெடியானதும் பார்த்த ஷங்கர் இந்த காட்சியில் குலுங்கி குலுங்கி சிரித்தாராம். அதேபோல் தியேட்டரிலும் இந்த வசனத்திற்கு ரசிகர்களின் கைதட்டலும் கிடைத்தது. இந்த தகவலை அந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த இயக்குனர் பாண்டிராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: இப்படி ஆகணும்னு நினைச்சேன்.. வடிவேலு கூட சேர்ந்து தப்பு பண்ணிட்டேன்!… புலம்பும் காமெடி நடிகர்…
COPYRIGHT 2024
Powered By Blinkcms