அம்மா நடிகையுடன் டச்சிங் டச்சிங்கில் அந்த தயாரிப்பாளரா? விஷயம் தெரிஞ்சு டெரரான அந்த நடிகை

Actress Pragathi: தமிழ் சினிமாவில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலேயே அறியப்பட்டவர் நடிகை பிரகதி. பாக்யராஜாவால் அறிமுகமான பிரகதி நடித்த அத்தனை படங்களிலும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தார். ஆனால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.

தெலுங்கில் இவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அங்கு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டவர். பிரகதி தனது 20 வது வயதிலேயே ஒரு ஐடி ஊழியரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயாக இருக்கிறார்.

இதையும் படிங்க: ஈஷாவில் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் – நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று அரண்மனைக்கிளி சீரியல். இந்த சீரியலில் அம்மாவா நடித்து மக்களின் ஒட்டுமொத்த அபிமானங்களையும் பெற்றார் பிரகதி. திருமணமான பிரகதி இடையிலேயே தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விவாகரத்து செய்து இப்போது தன் அம்மாவுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் 47 வயதாகியிருக்கும் பிரகதி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் காதல் கொண்டதாகவும் அவரை இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறார் என்றும் சில தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை பார்த்த பிரகதி மிகவும் காண்டாகிவிட்டாராம்.

இதையும் படிங்க: இந்த வசனத்தை நான் பேச மாட்டேன்!.. 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு செய்த ஆர்ப்பாட்டம்!..

அந்த செய்தி உண்மையில்ல்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் பிரகதி அந்த செய்தியை வெளியிட்ட தெலுங்கு ஊடகங்களின் மீது தன்னுடைய கடுமையான கண்டனத்தை தன் இன்ஸ்டா பதிவின் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

அம்மா ரோல்களில் கனக் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் பிரகதி. இவரின் நடிப்பும் அனைவராலும் பாராட்டக்கூடியதாகவே இருக்கும். இந்த வயதில் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்குவார் என பிரகதியே நினைத்திருக்க மாட்டார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் பண்ண வேலை! நல்லா இருந்த மனுஷனையும் கெடுத்துடுச்சு – என்ன சீயான் நீங்களுமா இப்படி?

Rohini
Rohini  
Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it