Connect with us
lingusamy

Cinema History

லிங்குசாமியை கதறவச்ச அந்த ஒரு திரைப்படம்… ஒடஞ்சு போன மனுஷன் என்ன செஞ்சாரு தெரியுமா?…

ஒரு படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் கதை மிகவும் முக்கியமானது. மேலும் அப்படத்தில் நடிக்கும் நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்தான். ஆனால் சில சமயம் என்னதான் முன்னணி நடிகர்கள் அப்படத்தில் நடித்தாலும் இயக்குனரின் கதை சரியாக இல்லை என்றால் நிச்சயம் அப்படம் தோல்வியையே தழுவும்.

அப்படிபட்ட ஒரு திரைப்படம்தான் அஜித் நடிப்பில் வெளியான ஜி திரைப்படம். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சரண்ராஜ், விஜயகுமார், மணிவண்ணன் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருந்தனர். இப்படம் இவருக்கு தோல்வியையே சம்பாதித்து கொடுத்தது.

இதையும் வாசிங்க:பீடி கேட்ட ரஜினிக்கு கிளாஸ் எடுத்த தோட்டக்காரார்!.. அதிலிருந்து சூப்பர்ஸ்டார் கத்துக்கிட்டது இதுதானாம்!…

லிங்குசாமி ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இவர் பின் ரன், அஞ்சான், சண்டக்கோழி போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். ஆனால் இவருடைய இயக்கத்தில் இவருக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்த படம்தான் ஜி.

இப்பட ரிலீஸுக்கு பின் இவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்தான் இவர் உடனடியாக அடுத்த படத்தை இயக்க காரணமாக அமைந்தது. ஜி பட ரிலீஸுக்கு பின் திரையரங்க உரிமையாளர் ஒருவர் இவருக்கு போன் செய்து ‘என்ன சார் படம் எடுத்து வச்சிருக்கீங்க?… உங்கள நம்பிதான் தியேட்டருக்கு சுண்ணாம்புலாம் அடித்து படத்தை வெளியிட்டோம்.. உங்களால் இப்போ எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும் போலயே’… என கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:காக்கா – கழுகு சண்டையை கார்த்திக் சுப்புராஜிடம் கேட்ட விஜே பார்வதி!.. மனுஷன் காண்டாகி திட்டிட்டாரு!..

இதனை கேட்ட லிங்குசாமிக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டதாம். பின் வீட்டிற்கு வந்த அவருக்கு தியேட்டர் உரிமையாளர் கூறியது அழுத்தமாகவே இருந்துள்ளது. இரவு முழுக்க அழுதுள்ளார். பின் இவருக்குள் ஒரு எண்ணம் தோன்றியுள்ளது.

இப்படி தோல்வி படத்தை கொடுத்த நாம் உடனே அடுத்ததாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என எண்ணியுள்ளார். அப்படி அவர் உருவாக்கிய திரைபப்டம்தான் சண்டகோழி. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது மனகஷ்டத்தினால் இவர் இயக்கிய சண்டகோழி இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின் சில ஆண்டுகளுக்கு பின் சண்டகோழி2 எனும் படத்தையும் இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:கோயிலில் நுழைய எம்ஜிஆர் பட இயக்குனருக்கு போடப்பட்ட தடை! அதையும் மீறி எப்படி படமாக்கினார் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top