காக்கா – கழுகு சண்டையை கார்த்திக் சுப்புராஜிடம் கேட்ட விஜே பார்வதி!.. மனுஷன் காண்டாகி திட்டிட்டாரு!..

0
739

கார்த்திக் சுப்புராஜே பேட்ட படத்துக்கு பிறகு 4 வருடங்கள் கழித்துத் தான் தனது படத்தை தியேட்டரில் வெளியிட காத்திருக்கிறார். அந்த படத்தை புரமோட் செய்ய பேட்டி கொடுக்க வந்த அவரிடம் காக்கா – கழுகு சண்டையை பற்றி கேட்டு தலைவர் ரசிகரை டென்ஷனாக்கி செமையா வாங்கிக் கட்டிக் கொண்டார் விஜே பார்வதி.

பேட்ட படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து இயக்கிய ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகியும் ஓடவே இல்லை.  அவர் தயாரிப்பில் வெளியான சில படங்களும் தோல்வியை தழுவி அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், வேறு வழியில்லாமல் மீண்டும் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஜிகர்தண்டா படத்தினை நம்பி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கி உள்ளார்.

இதையும் படிங்க: இந்த படத்தோட வேல்யூ தெரியுமாடா உனக்கு!.. அனிருத்தை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இசைப்புயல் தான் கெத்து!..

வரும் தீபாவளிக்கு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அதுதொடர்பாக பேட்டியளித்த கார்த்திக் சுப்புராஜிடம் இன்டர்நெட்டில் தீயாக பரவி வரும் காக்கா – கழுகு சண்டை பற்றி என்னை நினைக்கிறீங்க என கேட்டதும், கேள்வியே தப்பான கேள்வி என்றும் நீங்க தான் சண்டை மூட்டி விடப் பார்க்குறீங்க என விளாசிய கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் சண்டை முட்டாள்த்தனமானது. எல்லா நடிகர்கள் படங்களையும் மக்கள் ரசித்துப் பார்க்கின்றனர். சினிமாவைத் தான் ரசிக்க வேண்டும் அதை வைத்து சண்டை போடக் கூடாது என நறுக்கென குட்டியுள்ளார்.

அடுத்த கேள்வியாக லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டர் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் கேங்ஸ்டர் படத்தையும் எப்படி பார்க்குறீங்கன்னு இன்னொரு கேள்வியை எழுப்ப மனுஷன் டென்ஷனாகி விட்டார்.  இங்க முதல் பரிசு என ஒன்றும் இல்லை. நல்ல படங்கள் அனைத்துமே ஓடுகின்றன. நடிகர்கள் சண்டையே வேண்டான் எனக் கூறுகிறேன். என்னிடமே இயக்குநர்களுடன் சண்டையை மூட்டி விட பார்க்குறீங்களா என்றும் வெளுத்து வாங்கி விட்டார்.

இதையும் படிங்க: அடுத்த ஆண்டு ஆண்டவர் ஆண்டு தான் போல.. இந்தியன் 2, இந்தியன் 3 எப்போ ரிலீஸ் தெரியுமா?

google news