Connect with us

Bigg Boss

பிரதீப் பெயரை மொத்தமாக கெடுத்த பிக் பாஸ்!.. வெளியே வந்து அவர் போட்ட எமோஷனல் போஸ்ட்!

பிக் பாஸ் வீட்டில் இரவு நேரங்களில் திடீரென எழுந்து கொண்டு பெண் போட்டியாளர்கள் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரதீப் ஆண்டனி என்றும், டாய்லெட் போகும்போது கதவை சாத்தாமல் போகிறார் என்றும், போட்டியாளர்கள் பற்றியும் அவர்களது பெற்றோர்கள் பற்றியும் ஆபாசமாக பேசியது, பெண் போட்டியாளர்களுடன் லவ் கன்டன்ட் தருகிறேன் என எல்லை மீறியது என ஏகப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரதீப் ஆண்டனியை சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளார்.

பிரதீப் ஆண்டனியை பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியே அனுப்பியதற்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் கவின், சினேகன் உள்ளிட்ட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆத்தி!.. பாதிக்கு மேல பாப் அப் ஆகுதே.. பாடாய்ப்படுத்தும் ஸ்ரீதேவி மகளின் ஜொள்ளு விடும் பிக்ஸ்!..

கமல் செய்தது தவறு என்றும், அவரிடத்தில் ஏகப்பட்ட பெண்கள் எப்படி எல்லாம் பாதுகாப்பாக இருந்தனர் என்பது எங்களுக்குத் தெரியும் என பிரதீப் ஆண்டனியின் பி ஆர் டீம் கமலுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெளியே வந்த பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ நான் விளையாடியது முழுவதும் கேம்தான் என நினைத்துக் கொண்டிருந்தேன்.. வெளியே வரும் போது தான் தெரிந்தது நான் ஏகப்பட்ட தவறுகளை செய்துள்ளேன் என, இதையெல்லாம் திட்டமிட்டு வேண்டும் என்றோ செய்யவில்லை. ஆனால் நான் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உள்ளே உள்ளே யார் மீதும் எனக்கு எந்த ஒரு கோபமும் இல்லை. வெளியே மக்கள் எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு கொடுத்திருப்பது எனக்கு உள்ளே தெரியவே இல்லை.

இதையும் படிங்க: பிரதீப் ரெட் கார்டு அறிந்து கவின் போட்ட பதிவு – நெகிழ வைக்கும் புகைப்படம்!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகவே என்னை மாற்றிவிடலாம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் தவறு செய்து வெளியேறி விட்டேன். இனிமேல், மீண்டும் என் வாழ்க்கை பயணத்தை நான் புதிதாக தொடர்வேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top