Cinema News
‘தக்’ வார்த்தைக்கு பின்னால் இருக்கும் வரலாறு இதுதான்!.. அட உலக நாயகன் சும்மா வைக்கல பேர!.
Thug Life: இயக்குனர் மணிரத்தினமும், கமல்ஹாசனும் 36 வருடங்களுக்கு பின் இணையும் புதிய படத்திற்கு ‘தக் லைப்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அழகான தூய தமிழில் பெயர் வைக்கும் மணிரத்னம் இந்த படத்திற்கு ஆங்கிலத்தில் ஏன் பெயர் வைத்தார்? என ஒரு பக்கம் பஞ்சாயத்து துவங்கியுள்ளது.
ஒருபக்கம் ‘தக் லைப்’ என்றால் என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. முதலில் இந்த தலைப்பை வைத்தது மணிரத்தினம் இல்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் தேர்ந்தெடுத்த தலைப்பு இது. மணிரத்தினம் ‘சக்திவேல்’ என்கிற தலைப்பை சொன்னதாக சொல்லப்படுகிறது. சரி.. ‘தக் லைப்’ என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
இதையும் படிங்க: இது என்னடா டைட்டில்?!.. கேஜிஎப் ரேஞ்சிக்கு பில்டப்!.. எடுபடுமா கமல் 234?!.. டைட்டில் வீடியோ பாருங்க!..
‘தக்’ என்பதை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் இந்தியர்கள்தான். பின் விளைவை பற்றி யோசிக்காத, தைரியமான, மோசடிக்காரனை குறிக்கும் வட மொழி சொல்தான் ‘தக்’. எவன் ஒருவன் பூஜ்ஜியத்தில் துவங்கி, தன்னை ஏதோ ஒன்றாக வளர்த்துக்கொள்கிறானோ அவனே தக். பின்னாளில் அதோடு கண்ணாடி, சுருட்டு எல்லாம் நாமாக சேர்த்துக்கொண்டது.
இழப்பதற்கு எதுவுமில்லாத, எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளூம் வாழ்க்கையைத்தான் ‘தக் வாழ்க்கை’ என வெளிநாடுகளில் சொல்கிறார்கள். இங்கிலாந்து அரசு இந்தியாவில் கொள்ளையடிக்க திட்டமிட்டபோது ‘தக்’ கூட்டம் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.
இதையும் படிங்க: அந்த படத்தில இருந்து அடிச்சி பண்ணதா இது?!. தக் லைப் வீடியோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!…
எனவே, ‘தக்’ கூட்டத்தை வேரோடு அழிக்கவில்லை எனில் இந்தியாவில் கொள்ளையடிக்க முடியாது என 1830ம் வருடம் இங்கிலாந்து அறிக்கையும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, தக்-குகளை அழிக்கும் வேலையையும் இங்கிலாந்து அரசு துவங்கியது. இதற்காக கேப்டன் ஸ்லீமன் என்பவர் நியமிக்கப்பட்டார். மொத்தம் 4 ஆயிரம் தக் வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் 2 ஆயிரம் பேருக்கு மரண தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் தக் வீரர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஸ்லீமன் இங்கிலந்துக்கு அறிக்கையும் சமர்பித்தார்.
முல்லை பெரியாறு அணையை கட்ட தேக்கடி வந்த ஜான் பென்னி குயிக், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வாழ்ந்துவந்த உயிருக்கு பயப்படாத வருஷ நாட்டு மறவர்களின் செயல்களை கண்டு அசந்துபோய் ‘தக் வாழ்க்கை’ என குறிப்பிட்டு ஒரு நீண்ட பட்டியலை இங்கிலாந்துக்கு அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி ‘தக்’ என்கிற வார்த்தைக்கு பின் இவ்வளவு அர்த்தமும், வரலாறும் இருக்கிறது. இதை பற்றி நன்றாக தெரிந்துகொண்டுதான் கமல் இந்த படத்திற்கு தக் லைப் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தில் கமல் ஒரு தக் வீரனாக நடித்திருப்பார் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: KH234: நாயகன் இரண்டாம் பாகமா தக் லைஃப்? யாகுசாவாக மிரட்டும் கமலுக்கு அடுத்த மைல்கல்லா?..