Cinema News
விளம்பரம் மட்டும்தானா!. அப்போ உங்க காசு இல்லையா?.. ‘தக் லைப்’ பின்னால் இருக்கும் சீக்ரெட்…
Thug Life: எந்தவொரு படத்தின் பட்ஜெட்டை தீர்மானிப்பது அப்படத்தின் தயாரிப்பாளர்கள்தான். படம் லாபமானாலும் சரி நஷ்டமானாலும் சரி அதனை எதிர்கொள்வது தயாரிப்பாளர்கள்தான். நடிகர்கள் இயக்குனர்கள் அனைவரின் சம்பளமும் தயாரிப்பாளர் கையில்தான் உள்ளது.
அப்படிபட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம். இந்நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகவுள்ள தக் லைஃப் திரைப்படத்தினை தயாரிக்க உள்ளது.
இதையும் வாசிங்க:அண்ணனிடம் ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட கங்கை அமரன்… தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த இசைஞானி…
இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் இது பல வித கருத்துகளை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இப்படம் கமலுக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்படத்தின் டிரெய்லரில் முதலில் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலில் பேக்டரி, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் என மூன்று தயாரிப்பு நிருவனங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. இதனை பார்க்கும் போது இம்மூன்று நிறுவனங்களும், இணைந்து இப்படத்தினை தயாரிப்பதாக தோன்றும்.
இதையும் வாசிங்க:விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…
ஆனால் உண்மை என்னவென்றால் இப்படத்தை தயாரிப்பது இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்துதான். ஆனால் முதலீடு செய்வதில் ஒரு சின்ன கணக்கு இருக்கிறதாம். இப்படத்திற்கு கமல் சம்பளம் வாங்க போவதில்லையாம். அதற்குபதிலாக தனது சம்பளத்தை இப்படத்திற்கு முதலீடு செய்கிறாராம்.
அதேபோல் மணிரத்னமும் தனது சம்பளத்தை இப்படத்திற்கு முதலீடாக கொடுப்பாராம். மிச்சபடி படத்திற்கு நிதி வழங்குவது ரெட் ஜெயண்ட்தான். இந்த தொகை அனைத்தும் போக இப்படத்திற்கு வரும் லாபத்தினை மூன்று நிறுவனங்களும் பிரித்து கொள்வார்களாம். ஆண்டவர் கணக்கே தனிதான் போல.
இதையும் வாசிங்க:இவ்வளவு படங்களை தயாரிச்ச ஏவிஎம் நிறுவனம் அத மட்டும் பண்ணதே இல்லை!.. ஏன் தெரியுமா?..