விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…

Vadivelu: தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயல் வடிவேலுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் அவருடன் பழகிய யாருமே வடிவேலுவை பெருமையாக சொன்னதே இல்லை. அவரிடம் அத்தனை பிரச்னைகள் இருப்பதாகவே அனைவரும் பேட்டி கொடுத்து எங்க வாழ்க்கையே வடிவேலு அழித்து விட்டதாக கூறி இருக்கின்றனர்.

நடிகர் வடிவேலு ஒருகட்டத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். அவர் நடிக்கும் படங்களில் அவர் வைப்பது தான் சட்டம். இயக்குனர் தான் அடங்கி போக வேண்டும். இல்லையென்றால் நிறைய தொல்லை கொடுப்பாராம். வசனம் கூட அவர் நினைப்பது தான்.

இதையும் வாசிங்க:ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..

இந்நிலையில் வடிவேலு விஜயகாந்தை குறித்து பிரச்சாரத்தில் தேவையில்லாமல் நிறைய பேச ஒரு கட்டத்தில் தன்னுடைய கேரியரில் இருந்தே விலகினார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அதில் இருந்து அவருடன் பழகியவர்கள் ஓபனாகவே அவர் குறித்த உண்மைகளை சொல்ல தொடங்கினர்.

அந்த வகையில் வடிவேலுவுடன் இணைந்து சில படங்களில் நடித்தவர் பெஞ்சமின். அதிலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலுவை திட்டு காட்சியில் வைரலானார். ஆனால் அவர் விஜயுடன் இணைந்து நடித்த திருப்பாச்சி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார்.

இதையும் வாசிங்க:ஆசையாக கேட்ட ரஜினியை காக்க வைத்த கமலின் ஆஸ்தான எழுத்தாளர்..! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..?

அதேப்போல தயாரிப்பாளர்கள் வரிசையாக வந்து ஒன்ன்ரை லட்சம் வரை அட்வான்ஸ் கொடுத்து சென்றார்களாம். ஷூட்டிங் கூப்பிடுவாங்க என அவர் காத்து இருக்க ஒருவரும் அவருக்கு கால் செய்யவே இல்லையாம். 1 வருடம் காத்திருந்த பின்னரே இது வடிவேலுவின் வேலை என்பதை அறிந்தாராம்.

தன்னுடைய ஆட்களை தயாரிப்பாளர்களாக அனுப்பி காசை கொடுத்து அவர் கேரியரை முடித்து விட்டு இருக்கிறார். ஒரு வருடத்திற்கு பிறகு சினிமாவில் நடித்து திருப்பாச்சி வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லையாம். வளர வேண்டிய அவரை இன்று வரை சின்ன ரோலில் நடிக்கும் நிலையிலே வைத்து விட்டாராம் வடிவேலு.

 

Related Articles

Next Story