Cinema History
எம்ஜிஆரிடம் அத கேட்டது தப்பா? அடுத்த நாளே படப்பிடிப்பில் இருந்து துரத்தப்பட்ட எஸ்.ஏ.சி
MGR vs SAC: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே ஒரு தலைசிறந்த நடிகராகவும் தலைவராகவும் அறியப்பட்டவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் நம் எம்ஜிஆர். ஆரம்பத்தில் கிட்டத்தட்ட ஒரு 15 படங்களுக்கும் மேலாக துணை நடிகராகத்தான் நடித்து வந்தார் எம்ஜிஆர்.
அவர் அறிமுகமான படம் சதிலீலாவதி. தொடர்ந்து பல படங்களில் நடித்த எம்ஜிஆரை முதன் முதலில் ஹீரோவாக பார்த்த படம் ராஜகுமாரி. இந்த படத்தின் மூலம்தான் எம்ஜிஆர் நாயகனாக அந்தஸ்தை பெற்றார். முதல் படத்திலேயே வாளை கையில் எடுத்தவர் அடுத்தடுத்த படங்களிலும் அதையே பயன்படுத்த தொடங்கினார்.
இதையும் படிங்க: சிவாஜி பட பாட்டுல இருந்துதான் சுட்டாங்களா?!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டு உருவான விதம் இப்படித்தான்!.
ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் அடையாளமாகவே வாள் அமைந்தது. இப்படி திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி ஒரு தன்னிகரற்ற மனிதராகவே மக்கள் இவரை பார்த்தனர். இந்த நிலையில் எம்ஜிஆரை பற்றி எஸ்.ஏ.சி ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியிருக்கிறார்.
எம்ஜிஆரும் லதாவும் சேர்ந்து நடித்த படமான நாளை நமதே படத்தில் எஸ்.ஏ.சி அசோசியேட்டிவாக பணிபுரிந்தாராம். அப்போது ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். அந்தக் காட்சி முடிக்கப்பட்டதும் பக்கத்தி இருந்து ஒரு குரல் ஒன்மோர் என கேட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அந்த படத்துல கூட வாய்ப்பு கேட்டேன்!. ஆனா விஜய் கொடுக்கல!.. அதிரவைத்த ஷோபா சந்திரசேகர்..
யாருப்பா அது? என எம்ஜிஆர் பார்க்கும் போது ஒன்மோர் கேட்டது எஸ்.ஏ,சியாம். சரி கேட்கும் போது மீண்டும் நடித்துக் கொடுக்கத்தானே வேண்டும். எம்ஜிஆரும் மீண்டும் நடித்திருக்கிறார். நடித்து முடித்துவிட்டு எம்ஜிஆர் எஸ்.ஏ.சியை தனியாக அழைத்து நீ வருங்காலத்தில் பெரிய இயக்குனராக வருவாய் என சொல்லியிருக்கிறார்.
மறுநாளும் படப்பிடிப்பு தொடங்க எப்போதும் எஸ்.ஏ.சியை அழைக்க செட்டில் இருந்து ஒரு கார் அனுப்பப்படுமாம், ஆனால் வரவில்லையாம். சரி . ஆட்டோவில் போகலாம் என நினைத்து ஆட்டோவில் ஏறி ஸ்பாட்டிற்கு சென்றுவிட்டாராம்.
இதையும் படிங்க: மனைவி ‘நோ’ சொன்ன நடிகர்!.. ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்த கதையை மெகா ஹிட்டாக்கிய பாக்கியராஜ்!..
இவரை பார்த்ததும் அந்த பட இயக்குனர் ஓடோடி வந்து ‘இனிமே உனக்கு இங்கு வேலை இல்லை’ என சொல்லி துரத்தி விட்டார்களாம். இந்த சம்பவத்தை கூறிவிட்டு எஸ்.ஏ.சி என்ன புரியுதா என்பது போல சிரித்தார்.