வாய்ப்பு கேட்ட நடிகையிடம் கமல் சொன்ன வார்த்தை!.. அவங்க என்ன பதிலடி கொடுத்தாங்க தெரியுமா?..

Published on: November 8, 2023
kamal
---Advertisement---

Actress Rohini about Kamal: தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக கமல் இருந்து வருகிறார். நடிப்பில் நான் அண்ணாந்து பார்க்கக் கூடிய இரு நடிகர்கள் என்றால் ஒன்று சிவாஜி இன்னொருவர் உலகநாயகன் கமல் என பல மேடைகளில் நடிகர் சிவக்குமார் அடிக்கடி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அந்தளவுக்கு கமல் திரைத்துறையில் செய்யாத சாதனைகளே இல்லை. சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு துறைகளை பற்றி நன்கு தெரிந்தவர். தெரியாததை கற்றுக்கொண்டு வந்து சினிமாவில் புகுத்துவார். அதுமட்டுமில்லாமல் தொழில் நுட்ப ரீதியாகவும் சரி,

இதையும் படிங்க: ஒரு பாடலை எடுக்க 17 நாள்களா? கிளைமாக்ஸ்லயும் புதுடெக்னிக்கைக் கொண்டு வந்த ஏவிஎம்

மற்ற இதர விஷயங்களானாலும் சரி அதில் முன்னுதாரணமாக இருப்பவர் கமல்தான். இதை அன்றே செய்துவிட்டாரே கமல் என்று சொல்லுமளவுக்கு இவர் செய்யாத எந்த சாதனைகளும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் நடிகை ரோகிணி கமல் பற்றி பகிர்ந்த சில தகவல்கள் ஆச்சரியத்தை வரவழைத்தது. கமலுடன் மகளிர் மட்டும் என்ற ஒரே படத்தில்தான் ரோகிணி நடித்திருப்பார். அதற்கு  முன்பு வரை கமலை பற்றி தெரிந்து எப்படியாவது அவருடன் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் இருந்தாராம்.

இதையும் படிங்க: எம்ஜிஆரிடம் அத கேட்டது தப்பா? அடுத்த நாளே படப்பிடிப்பில் இருந்து துரத்தப்பட்ட எஸ்.ஏ.சி

மகளிர் மட்டும் படத்திற்கு முன்பு கமல் பொன்னியின் செல்வன் படம் எடுக்க திட்டமிட்டிருந்தாராம். இதை கேள்விப்பட்ட ரோகிணி இதில் பூங்குழலியாக நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார். அப்பவே பொன்னியின் செல்வன் புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்திருந்தாராம் ரோகிணி.

அதனால் ஒரு படப்பிடிப்பு தளத்தில் கமலை பார்க்க சென்ற ரோகிணி வாய்ப்பு கேட்காமல் நேரடியாகவே பூங்குழலி கதாபாத்திரம் நான் தான் பண்ணுவேன் என்று சொல்லியிருக்கிறார். இதை கேட்டதும் கமல் சிரிக்க சரி பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி பட பாட்டுல இருந்துதான் சுட்டாங்களா?!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டு உருவான விதம் இப்படித்தான்!.

அதன் பிறகுதான் மகளிர் மட்டும் படத்தில் பாப்பமா கேரக்டர் ரோகினிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குணா படத்தில் நான் பயன்படுத்திய கருப்பு நிற மேக்கப் தான் இந்த படத்தில் நீங்க போடவேண்டும் என ரோகிணியிடம் கமல் சொன்னாராம்.

மற்ற ஹீரோயின்கள் எல்லாம் ஸ்டைலிஷாக பார்க்க கூடிய தோற்றத்தில் இருக்க ரோகினி மட்டும் ஒரு மாதிரி கருப்பு நிற லோக்கல் ஏரியாவில் இருக்கும் பெண்ணாக தோன்றியிருப்பார். உடனே கமல் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ரோகிணியை அழைத்து ‘இந்த படத்தில் நீ ஸ்ரீதேவி இல்லை’ என்று சொன்னாராம். அதற்கு ரோகினி ‘  நான் நானாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்றாராம்.