Connect with us
vijayakanth

Cinema History

ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல… கேப்டன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள் எத்தனைன்னு தெரியுமா?…

Vijayakanth Movies: விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் நடிகரை தாண்டி மிகச்சிறந்த மனிதரும் கூட. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றன. இவர் நடித்த வைதேகி காத்திருந்தால் திரைப்படம் 1984ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தை சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார்.

பின் 1986ஆம் ஆண்டு தழுவாத கைகள் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தையும் சுந்தர்ராஜன்தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார். இதே தீபாவளிக்கு இவரின் தர்ம தேவதை திரைப்படமும் வெளியானது. இப்படத்தினை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ராதிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:வடிவேலு அட்வான்ஸ் என் சம்பளமா?!.. விஜயகாந்த் படத்தில் தகராறு செய்த செந்தில்…

இதற்கு அடுத்த வருடமே, அதாவது 1987ம் வருடம் விஜயகாந்தின் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகின. உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு, மனதில் உறுதி வேண்டும் போன்ற மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இப்படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. பின் 1988ஆம் ஆண்டு கேப்டன் நடிப்பில் உழைத்து வாழ வேண்டும் மற்றும் தெண்பாண்டி சீமையிலே திரைப்படங்கள் வெளியானது. இவ்விரு படத்திலும் இவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருந்தார்.

பின் 1989ஆம் ஆண்டு கேப்டன் நடிப்பில் இரு திரைப்படங்கள் வெளியாகின. ஒன்று எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ராஜ நடை. மற்றொன்று கே.ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான தர்மம் வெல்லும் திரைப்படம். தர்மம் வெல்லும் திரைப்படத்தில் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதற்கு அடுத்த ஆண்டு கேப்டனின் சத்ரியன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இவருடன் இணைந்து பானுப்பிரியா நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..

பின் 1991ஆம் ஆண்டு மூன்றெலுத்தில் என் மூச்சிருக்கும் திரைப்படமும் 1992ஆம் ஆண்டு காவியதலைவன் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இதே ஆண்டுதான் தாய் மொழி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தில் இவர் போலிஸாக நடித்திருந்தார். பின் 1993ஆம் ஆண்டு எங்க முதலாளி திரைப்படம் வெளியானது. ஆனால் இப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை.

பின் 1994ஆம் ஆண்டு பெரியமருது திரைப்படம், 1996ஆம் வருடம் அலெக்சாண்டர் திரைப்படமும், 1998ஆம் ஆண்டு வீரம் வெளஞ்ச மண்ணு போன்ற திரைப்படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின. பின் 1999ஆம் ஆண்டு கண்ணுபடபோகுதையா திரைப்படம் வெளியானது. 2001ஆம் ஆண்டு தவசி திரைப்படமும், 2002ஆம் ஆண்டு ரமணா திரைப்படமும் வெளியானது. 2004ஆம் ஆண்டு நெறஞ்ச மனசு திரைப்படமும், 2006ஆம் ஆண்டு தர்மபுரி திரைப்படமும் வெளியானது. இவ்வாறு தொடர்ந்து 17 ஆண்டுகளாக கேப்டனின் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:ப்ளூ சட்டை மாறனுக்கு குசும்பு ஜாஸ்திதான்!.. விஜய், கமல் போட்டோவை போட்டு அப்படியொரு கலாய் கேப்ஷன்?..

google news
Continue Reading

More in Cinema History

To Top