விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..
Actor vadivelu: சினிமாவில் இரண்டு வகையான மனிதர்கள் இருப்பார்கள். கஷ்டப்பட்டு மேலே வருவார்கள். இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் அவர்களை தூக்கிவிடுவார்கள். அப்படி பல படங்களில் நடித்து ஒரு இடத்தை பிடித்து அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு போவார்கள். நிறைய படங்களில் நடித்து பிஸியான நடிகராக மாறுவார்கள். ஆனாலும், கடைசிவரை நன்றி மறக்காமல் இருப்பார்கள்.
இதில் சிலர் இதற்கு நேர் எதிராக இருப்பார்கள். பலரும் உதவி செய்துதான் இந்த இடத்திற்கு வந்தோம் என நினைத்து பார்க்க மாட்டார்கள். திமிறுடன் நடந்து கொள்வார்கள். உதவி செய்தவர்களுக்கே வேட்டு வைப்பார்கள். அதில் முக்கியமானவர் வடிவேலு. இவர் தனக்கு உதவிய எவரையும் நினைத்து பார்க்க மாட்டார்.
இதையும் படிங்க: விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…
வடிவேலுவுக்கு முதல் வாய்ப்பு கொடுத்ததே ராஜ்கிரண்தான். ஒருமுறை அவருக்கு சில லட்சங்கள் கொடுத்து உதவிய வடிவேலு அதை எல்லோரிடமும் சொல்லி தம்மட்டம் அடித்துக்கொண்டார். சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க கூடாது என கவுண்டமணி சொன்னபோது விஜயகாந்த் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதோடு, உடுத்த துணி கூட இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு தனது சொந்த செலவில் வேஷ்டி, சட்டைகளையும் விஜயகாந்த் வாங்கி கொடுத்தார். ஆனால், பின்னாளில் வடிவேலு விஜயகாந்தை எப்படியெல்லாம் திட்டினார் என்பது எல்லோருக்கும் தெரியும். வடிவேலுவின் சுபாவமே அதுதான்.
இதையும் படிங்க: இந்த வசனத்தை நான் பேச மாட்டேன்!.. 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு செய்த ஆர்ப்பாட்டம்!..
பாக்கியராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் சொக்கத்தங்கம். இந்த படத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்து அவருக்கு 3 லட்சம் அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது. ஆனால், அப்படத்திற்கு வடிவேலு கடைசிவரை கால்ஷீட் கொடுக்கவே இல்லையாம். பொறுத்து பொறுத்து வெறுத்துப்போன பாக்கியராஜ் கவுண்டமணியை அழைத்து நடிக்க சொன்னார். நடிகர் செந்திலை தன்னோடு சேர்த்துக்கொண்டு கவுண்டமணி இந்த படத்தில் தனது காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.