Cinema History
கஷ்டப்படும்போது இப்படித்தான் இருந்தேன்!… படப்பிடிப்பில் அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்..
MGR: தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில கதாநாயகர்கள் மக்கள் மனதில் நீடித்து நிற்பார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர்தான் எம்ஜிஆர். இவர் நடிகரை தாண்டி சிறந்த மனிதரும் கூட. இவர் நடிப்பதை மட்டுமே தனது தொழிலாக கொள்ளவில்லை.
இவர் தன் வாழ்வில் மக்களுக்காக பல உதவிகளை செய்து வந்தவர். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர். இவரை விரும்பாதவர்கள் என எவருமே இருக்க முடியாது. இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ராஜகுமாரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.
இதையும் வாசிங்க:இயக்குனர் பண்ண ஒரே தப்பு! விக்ரம் கெரியரே போச்சு – சொன்னத கேட்டிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?
மேலும் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். இவர் ஒரு சிறந்த மனிதர் என்பதற்கு உதாரணமாக இவர் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இவர் நடிப்பில் 197ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் நவரத்னம். இத்திரைப்படத்தை இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கினார். இப்படத்தில் எம்ஜிஆருடன் இணைந்து ஸ்ரீப்ரியா, நம்பியார், தேங்காய் சீனிவாசன் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் பாடல்களை எழுதுவதற்கு எம்ஜிஆர், வாலி அனைவரும் சத்யம் ஸ்டுடியோவிற்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு மதிய உணவு இடைவேளைக்கு எம்ஜிஆர் தனது இல்லத்திலிருந்து அனைவருக்கும் கேரியரில் உணவு கொண்டுவந்துள்ளார். எம்ஜிஆர் அனைவரையும் சாப்பிட அழைத்துள்ளார். அப்போது வாலியுடன் அவரது நண்பர் பாகவதர் என்பவர் வந்துள்ளார். அப்போது வாலி அவரிடம் பணம் கொடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க:பராசக்தி படத்துக்கு வந்த பஞ்சாயத்து… கலங்கிய நடிகர் திலகம்!.. கடைசியில் நடந்தது இதுதான்!..
அதனை எம்ஜிஆர் கவனித்துள்ளார். உடனே அங்கிருந்தவர்களிடம் நீங்கள் அனைவரும் சாப்பிடுங்கள். நான் இதோ வருகிறேன் என கூறிவிட்டு அக்கிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த வாலியின் நண்பரான பகவதரிடம் சென்று அவருடன் சேர்ந்து சாப்பிட அழைத்து சென்றுள்ளார். அந்த நண்பருக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. மேலும் அங்கிருந்த அனைவரும் தரையில் அமர்ந்துதான் சாப்பிட்டுள்ளனர்.
உடனே அவர் எம்ஜிஆரிடம் நீங்கள் போய் தரையில் உட்கார்ந்து சாப்பிடலாமா? என கேட்டுள்ளார். அதற்கு எம்ஜிஆரும் யானை கவனியில் நான் இருந்தபோது நான் என்ன டேபிளிலா உட்கார்ந்து சாப்பிட்டேன்.. அதனால் இது எனது பழக்கம்தான் என கூறினாராம். என்னதான் புகழ் பெற்றவராய் இருந்தாலும் பழைய வாழ்க்கையை மறக்காதவர் எம்ஜிஆர்.
இதையும் வாசிங்க:படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பிய ஜெயலலிதா!.. பதறிப்போன இயக்குனர்.. நடந்தது இதுதான்!…