Connect with us
jeyalalitha

Cinema History

படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பிய ஜெயலலிதா!.. பதறிப்போன இயக்குனர்.. நடந்தது இதுதான்!…

Jeyalalitha: ஜெயலலிதா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாய் ஜொலித்தவர். தமிழில் வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாய் அறிமுகமானார். இவர் பல கன்னட தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் இவரின் முதல் தமிழ் படம் இதுவே.

இவர் மேலும் மணி மகுடம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, மாடி வீட்டு மாப்பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது பெரும்பான்மையான படங்களில் எம்ஜிஆருடன் இணைந்தே நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன், சந்த்ரோதயம், கணவன் போன்ற பல திரைப்படங்களில் இவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆரை மீறி திருமணம் செய்து வைத்த ஜெயலலிதா!.. பொன்மன செம்மலுக்கு வந்த கோபம்!.

இவர் பல முறை தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தனி ஒரு பெண்ணாக தனது முதலமைச்சர் பணியை மிகச்சிறப்பாக செய்தவர் ஜெயலலிதா. இவர் இன்றும் பல பெண்களுக்கு முன்னோடியாக திகழ்பவர். இவர் பொதுவாக ஆங்கில புத்தகங்கள் நிறைய படிப்பவராம். படப்பிடிப்பில் கூட யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து புத்தகங்களை படித்து கொண்டிருப்பாராம்.

இவர் நடிப்பிம் 1975ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அவளுக்கு ஆயிரம் கண்கள். இப்படத்தினை இயக்குனர் டி.ஆர்.ரமணா இயக்கினார். இப்படத்தில் ஜெய்ஷங்கர், ரவீந்திரன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் படபிடிப்பின்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு முறை இப்படத்திற்கான பாடல் ஷூட்டிங் பூண்டி அணைக்கட்டில் நடைபெற்று கொண்டிருந்ததாம். படக்குழு அனைவரும் வந்து தயாராக இருந்துள்ளனர்.

இதையும் வாசிங்க:ஜெயலலிதாவை பாக்கனும்னா கண்டிப்பா இத பண்ணனுமாம்! இல்லனா நடக்குறதே வேற – பிரபலம் சொன்ன தகவல்

அப்போது அங்கு ஜெயலலிதா காரில் வந்துள்ளார். வந்ததும் அப்படத்தின் நடன ஆசிரியர் ஜெயலலிதாவிற்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறார். பின் ஜெயலலிதா படபிடிப்பில் இருக்காமல் திரும்பவும் தனது காரிலேயே சென்றுவிட்டாராம். அங்கு இருக்கும் அனைவருக்கும் ஏன் என புரியவில்லையாம். பின் அந்த நாளில் படபிடிப்பே நின்றுவிட்டதாம். மறுநாள் படத்தின் இயக்குனர் ஜெயலலிதாவிற்கு போன் செய்து ‘எதனால் படப்பிடிப்பை விட்டு சென்றீர்கள்?’ என கேட்டாராம்.

அப்போது ஜெயலலிதா இயக்குனரிடம் ‘நீங்கள் தண்ணீரிலே ஷாட் என என்னிடம் சொல்லவே இல்லையே… நான் உடுத்தியிருந்ததோ தாவணி பாவாடை. அது தண்ணீரிலே இறங்கினால் மிதக்கும். நீங்கள் முன்னதாகவே கூறியிருந்தால் நான் இரு ஆடைகளை தைத்து வைத்திருப்பேன்’ என கூறினாராம். அதற்குபின்தான் இயக்குனருக்கே புரிந்ததாம் நாம் முன்னதாகவே கூறவில்லையே எனவும் மேலும் ஜெயலலிதா கூறியது சரிதான் எனவும் புரிந்து கொண்டாராம்.

இதையும் வாசிங்க:ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்!.. கவிஞருக்கு குசும்பு ரொம்ப அதிகம்தான்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top