ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்!.. கவிஞருக்கு குசும்பு ரொம்ப அதிகம்தான்!..

ayalalitha: தமிழ் திரையுலகில் 50,60களில் கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய அந்த நேரத்திலேயே அவருக்கு போட்டியாக பல பாடல்களையும் எழுதியவர். கண்ணதாசனை போலவே காதல், ஆன்மிகம், தத்துவம் என எல்லா களத்திலும் விளையாடியவர். துவக்கத்தில் சினிமாவில் கஷ்டப்பட்டுதான் நுழைந்தார்.

இங்கே வாய்ப்பு கிடைக்காது.. வேறு வேலைக்கு சென்றுவிடுவோம் என அவர் நினைத்த நாட்கள் கூட உண்டு. ஆனால், மெல்ல மெல்ல வாய்ப்புகள் கிடைத்து பிரபலமானார். எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நேரத்தில் வாலியை தனது படங்களுக்கு பாடல் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: கலைஞர் மகனுக்கு வாலி எழுதிய பாடல்!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி…

எம்.ஜி.ஆருக்கு பொருந்துவது போல் வாலி எழுதிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது. இனிமேல் என் படத்திற்கு வாலிதான் பாடல் எழுதுவார் என எம்.ஜி.ஆரே அறிவித்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் இப்போதும் முணுமுணுக்கும் பாடல்கள் எல்லாமே வாலி எழுதியதுதான். ஒருகட்டத்தில் வாலியின் வரிகளை பார்த்து கண்ணதாசனே புகழ்ந்தார்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மேஜர் சுந்தர்ராஜன், ஜெயலலிதா, நாகேஷ், முத்துராமன் என பலரும் நடித்து 1966ம் வருடம் வெளியான திரைப்படம் மேஜர் சந்திரகாந்த். வி.குமார் இப்படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் ஏவிஎம் ராஜனும், ஜெயலலிதாவும் நடனமாடும் ஒரு டூயட் பாடலுக்கு பாடல் எழுத வாலி அழைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..

வாலிக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை. அப்போது அருகில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எனவே, அப்படியே போய் பார்த்துவிட்டு வருவோம் என சென்றார். அங்கே வேறு ஒரு படத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்துடன் ஜெயலலிதா நடனம் ஆடிக்கொண்டிருந்தார். ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போது குட்டை பாவாடை அணிந்துகொண்டு அவரின் அம்மாவுடன் படப்பிடிப்புக்கு வந்தபோது வாலி பார்த்துள்ளார்.

அதன்பின் பெரிய பெண்ணாக, கதாநாயகியாக அப்போதுதான் பார்த்தார். உடனே அவருக்கு ஒரு பொறிதட்டியது. உடனே, அறைக்கு சென்று பாடல் வரிகளை எழுதினார். அந்த வரிகள் ‘நேற்று நீ சின்ன பாப்பா.. இன்று நீ அப்பப்பா’..

கவிஞருக்கு குசும்பு அதிகம்தான்!...

இதையும் படிங்க: ஜெயலலிதா செய்ததை மறக்காத எம்.ஜி.ஆர்!.. அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான்!..

 

Related Articles

Next Story