Cinema News
கமலிடமே வேலை காட்டிய லவ் டுடே பிரதீப்!.. ஒத்து ஊதி பல்பு வாங்கிய விக்னேஷ் சிவன்!.
Love today pradeep: சினிமாவை பொறுத்தவரை நடிகரோ இல்லை இயக்குனரோ ஒரு படம் வெற்றி பெற்றால் உடனே தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிடுவது என்பது கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. அதுவும், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து பல கோடிகளை வசூலித்துவிட்டால் சம்பளத்தை பல மடங்கு ஏற்றிவிடுவார்கள்.
குறும்படங்களை இயக்கிய போது யாரென்றே தெரியாமல் இருந்த பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தயாரிப்பாளர்கள் அவரை தேடிவந்தனர். ஆனால், ‘நான்தான் ஹீரோ’ என அடம்பிடித்தார். ஏஜிஎஸ் நிறுவனம் அதை ஏற்றுக்கொள்ள உருவான படம்தான் லவ் டுடே.
இதையும் படிங்க: ஜப்பான் படத்தை காலி செய்த விஜய் ஃபேன்ஸ்?!.. இதுக்கு பின்னாடி ஒரு பிளாஷ்பேக் இருக்கு!..
சுமார் 10 கோடிக்குள் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.80 கோடி வரை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. இதையடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்தது. ஆனால், ‘இனிமேல் ஹீரோ மட்டுமே’ என கறாராக சொன்னார் பிரதீப்.
இதற்கிடையில் விக்னேஷ் சிவன் ஒரு கதையை உருவாக்கி அதில் பிரதீப்பை ஹீரோவாக அப்படத்தை இயக்க நினைத்தார். இந்த கதையை கேட்டு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்க முன் வந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி. இதில், விக்னேஷ் சிவன் சம்பளம் ரூ.10 கோடி, பிரதீப் சம்பளம் ரூ.20 கோடி என சொல்ல ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பின் வாங்கிவிட்டது.
இதையும் படிங்க: சாவித்ரிக்கு ஆசையாய் ஜெமினி கொடுத்த கிப்ட்… தல தீபாவளிக்கு கூட இப்படியா பண்ணுவீங்க…
இப்போது மாஸ்டர், கோப்ரா, லியோ ஆகிய படங்களை தயாரித்த லலித்குமார் இப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பிரதீப் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதாக அவர் சொல்லிவிட்டாராம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து அவர் கழட்டிவிடப்பட்டார். இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் அவருக்கு நோ சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தக்காளிய வச்சு குட்டி ஸ்டோரி சொன்ன ரஜினிகாந்த்… யாருக்கு சொன்னாரு தெரியுமா?…