சாவித்ரிக்கு ஆசையாய் ஜெமினி கொடுத்த கிப்ட்… தல தீபாவளிக்கு கூட இப்படியா பண்ணுவீங்க…

0
760
gemini ganesan-savithri

Gemini Ganesan-Savithri: தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். இவர் சக்ரதாரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் மாமன் மகள், இரு சகோதரர்கள், கர்ப்புக்கரசி போன்ற பல திரைப்படங்களின் மூலம் சினிமாவில் தனக்கென தனி அந்தஸ்த்தை பெற்றார்.

இவருக்கும் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவரான சாவித்ரிக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் சலங்கை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இதையும் வாசிங்க:ஷாட் ரெடின்னதும் மனுஷன் இத கூடவா மறப்பாரு?.. ஐய்யய்யோ நம்பியாரோட மானம் போயிடுச்சே!.

அந்தகாலத்தில் மிகவும் புகழப்பட்ட ஜோடிகளில் இவர்களும் உண்டு. இவர்களின் ஜோடிக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அப்படம் நிச்சயமாக வெற்றியை சந்திக்கும். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போதுதான் இவர்களுக்குள் காதலும் மலர்ந்துள்ளது.

ஆனால் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும் அவர் சாவித்ரி மீது காதல் கொண்டார். ஆனால் சாவித்ரியின் காதலுக்கு அவரது பெரியப்பா சம்மதிக்கவில்லையாம். எங்கு சாவித்ரி வேறு திருமணம் செய்து கொண்டால் அவர் மூலமாக தனக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படுமோ எனும் அச்சத்தில் அவர் இவர்களை திருமணம் செய்து கொள்ள விடவில்லையாம்.

இதையும் வாசிங்க:ரஜினியின் சூப்பர் ஹிட் பட ரீமேக்!. அந்த நடிகர் மட்டுமே நடிக்க முடியும்!.. அட இயக்குனரே சொல்லிட்டாரே!..

பின் அலைபாயுதே பட ஸ்டைலில் இவர்கள் இருவரும் அவரவர் வீட்டுக்கு தெரியாமலேயே திருமணம் செய்து கொண்டனராம். இருவரின் வீட்டிற்கும் தெரியாமலே இவர்கள் கணவன் மனைவியாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில் தீபாவளியும் வந்துள்ளது. அப்போது இவர்களுக்கு தலைதீபாவளி என்பதால் ஜெமினி கணேசன் சாவித்ரிக்கு வெள்ளை நிறத்தில் பட்டுபுடவை எடுத்து கொடுத்தாராம்.

ஆனால் சாவித்ரியோ அதை வெளிக்காட்ட முடியவில்லை. தீபாவளி அன்று சாவித்ரி அப்புடவையை கட்டியுள்ளார். உடனே அவரது பெரியப்பா ‘தீபாவளி அதுவுமாக ஏன் வெள்ளை புடவை கட்டியிருக்கிறாய்?’ என கேட்டாராம். அதற்கு சாவித்ரி ‘இன்றுதான் தீபாவளியாச்சே.. படப்பிடிப்புதான் கிடையாதே’… என கூறிவிட்டாராம்.

பின்னர் தான் வாங்கி கொடுத்த புடவையில் சாவித்ரியை பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெமினி கணேசன் பல முறை சாவித்ரியின் வீட்டிற்கு சென்றாராம். ஆனால் அவரது பெரியப்பா அவர்களை சந்திக்க விடவில்லையாம். இவ்வாறு இருவரும் சந்திக்காமலே இவர்களின் தலைதீபாவளி முடிந்துவிட்டதாம்.

இதையும் வாசிங்க:நாடக குழுவையே வியக்க வைத்த உலகநாயகன்… ஆண்டவர் பிஞ்சிலேயே பழுத்தவர்தான் போல…

google news