Connect with us
nambiar

Cinema History

ஷாட் ரெடின்னதும் மனுஷன் இத கூடவா மறப்பாரு?.. ஐய்யய்யோ நம்பியாரோட மானம் போயிடுச்சே!.

M.N.Nambiar: தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற வில்லனாக இருந்தவர் நம்பியார். இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர் பக்தா ராமதாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின் தனது சிறந்த நடிப்பினால் மக்கள் மனதில் வில்லனாகவே கருதப்பட்டார். எம்ஜிஆரின் ரசிகர்கள் அனைவரும் ஒரு முறை இவரை சினிமாவில் எம்ஜிஆரை அடித்ததற்காக மிரட்டினார்களாம். அந்த அளவு இவர் தனது நடிப்பினை வெளிக்காட்டியுள்ளார்.

இதையும் வாசிங்க:விஜயகாந்த் இறங்கி வருவார்.. விஜய் கார் கண்ணாடி ஏத்திட்டு போயிடுவார்!.. பத்திரிக்கையாளர் பேட்டி..

மேலும் நாடோடி மன்னன், பாச மலர், வேட்டைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அந்த கால நடிகர்களுடன் மட்டுமல்லாமல் இந்த கால நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். எஜமான், பூவே உனக்காக, பாபா போன்ற பல திரைப்படங்களில் தனது நடிப்பினை மிகச்சிறப்பாக வெளிக்காட்டினார்.

என்னதான் வில்லனாக தன்னை காட்டியிருந்தாலும் நிஜ வாழ்வில் இவர் கலகலப்பானவரும் கூட. இவர் ‘பெண்ணரசி’ எனும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ஒரு முறை படப்பிடிப்பில் தனது காட்சிக்கு தயாராகி கொண்டிருந்தாராம். அப்போது படத்தில் அஸிஸ்டெண்டாக இருந்தவர் அவரை நடிப்பதற்காக கூப்பிட்ட வந்தாராம்.

இதையும் வாசிங்க:நாடக குழுவையே வியக்க வைத்த உலகநாயகன்… ஆண்டவர் பிஞ்சிலேயே பழுத்தவர்தான் போல…

உடனே நம்பியார் தனது பேண்டை கூட போட மறந்து அவரசரமாக படபிடிப்புக்கு சென்றாராம். அப்போது பின்னாடி வந்தவர் சார்.. சார்.. என அழைத்தபடி வந்தாராம். ஆனாலும் நம்பியார் படபிடிப்புக்கே சென்றுவிட்டாராம். அங்கு இருந்தவர்கள் ‘என்ன சார் இப்படி வந்துள்ளீர்கள்?’ என கேட்டனராம்.

உடனே நம்பியார் ‘அவர் ஷாட் ரெடி என சொன்னார்… அதான் நான் வேகமாக வந்தேன்… பார்த்தீர்களா நான் எவ்வளவு சின்ஸியராக இருக்கிறேன் என்று’… என கூறினாராம். இவ்வாறு அன்றைய படபிடிப்பை நம்பியார் கலகலப்பாக மாற்றினாராம்.

இதையும் வாசிங்க:அப்போ ரஜினியை சரியாக கவனிக்கல!.. இப்போ வருத்தப்படுறேன்!.. புலம்பும் இயக்குனர்…

google news
Continue Reading

More in Cinema History

To Top