Connect with us
kamalhaasan

Cinema History

நாடக குழுவையே வியக்க வைத்த உலகநாயகன்… ஆண்டவர் பிஞ்சிலேயே பழுத்தவர்தான் போல…

Kamalhaasan: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பின் சிகரம் என்றே இவரை கூறலாம். அந்த அளவுக்கு இவர் தனது நடிப்பினை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியவர். இவர் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை போன்ற பல திரைப்படங்களின் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த சமயத்தில் பிரபல நாடக கம்பெனி நடத்தி கொண்டிருந்தவர்தான் டி.கே.ஷண்முகம். இவர் தான் இயக்கிய நாடகங்களில் குழந்தை நட்சத்திரங்களை வைத்து இயக்கலாம் எனும் எண்ணத்தில் இருந்துள்ளார்.

இதையும் வாசிங்க:மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த நாகேஷ்… ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகை…

அதற்கான குழந்தைகளை தேடியுள்ளார் ஷண்முகம். அப்போது அவர் கமலை பற்றி கேள்விபட்டுள்ளார். உடனே கமலை அந்த நாடகத்தில் நடிக்க அழைத்துள்ளார். அப்போது அவரை வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேச சொன்னாராம். உலகநாயகன்னா சும்மாவா. கமல் மிக அழகாக அந்த வசனத்தை பேசினாராம்.

பின் அவர் இயக்கிய நாடகத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். அந்நிகழ்ச்சிக்கு எம்ஜிஆர், அண்ணாதுரை தலைமை தாங்கினார்களாம். அப்போது கமலின் நடிப்பை கண்ட எம்ஜிஆர் இந்த சிறுவன் வருங்காலத்தில் மிகவும் பெரிய ஆளாக வருவான். அந்த அளவுக்கு அவனுக்கு நடிப்பின் மீது அக்கரை உள்ளது என கூறினாராம். இந்த அக்கரை என்ற சொல்லுக்கு பின் அங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இதையும் வாசிங்க:சிவாஜிகிட்டயே தனது வேலையை காட்டிய சந்திரபாபு… குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல…

பொதுவாக நாடகங்களுக்கு  முதலிலேயே பாடல்களை பாடி வைப்பது வழக்கமாம். அப்போது அந்த நாடகத்திற்கு தேவையான பாடலையும் டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தனராம். ஆனால் சரியாக நாடகம் நடக்கும்போது அந்த டேப் அறுந்துவிட்டதாம். நாடக குழுவிற்கோ என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளனர்.

உடனே அந்த இடத்திலேயே கமல் அங்கு ஆர்கெஸ்ட்ராவில் இருந்தவர்களில் ஒருவரான ஹார்மோனியம் வாசிப்பவரிடம் கண்ணை காட்டி ஸ்ருதியை ஆரம்பிக்க சொன்னாராம். அவர் ஆரம்பிக்கவும் உடனே அந்த மீதி பாடலை கமலே பாடி முடித்துவிட்டாராம். அங்கு இருந்தவர்கள் அனைவரும் குறிப்பாக ஷண்முகம் வியப்பில் ஆழ்ந்துவிட்டாராம். இப்படி சிறுவயதிலேயே கமல் அனைவரையும் அசத்தியுள்ளார்.

இதையும் வாசிங்க:மிரட்டிய சிவக்குமார்!.. அதிர்ந்துபோன அர்ஜூன்.. அவரு அப்பவே அப்படிதான் போலயே!..

Continue Reading

More in Cinema History

To Top