Connect with us
actor nagesh

Cinema History

மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த நாகேஷ்… ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகை…

Actor Nagesh: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென தனி அந்தஸ்து உண்டு. படத்தில் கதைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதில் வரும் காமெடிகளுக்கும் உண்டு. எனவே எந்தவொரு படமானாலும் அதில் நடிக்கும் காமெடி நடிகர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அதில் ஒரு சிலரின் காமெடிகள் என்றும் நிலைத்து நிற்கும்.

அப்படிபட்டவர்களில் ஒருவர்தான் பழங்கால காமெடி நடிகர்களில் ஒருவரான நாகேஷ். இவர் தமிழில் பல திரைப்படங்களில் தனது காமெடிகளின் மூலம் பலரை கட்டி போட்டவர். இவர் மானமுள்ள மறுதாரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் எம்ஜிஆர், சிவாஜி என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:அந்த ஹீரோ நடிக்க வேண்டிய கதையில் நடித்த அஜித்!.. அட இதெல்லாம் நமக்கு தெரியாம போச்சே!..

படகோட்டி, நவராத்திரி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் காமெடிகள் கதைக்கு வலுவூட்டும்படி அமைந்திருந்தன. நிஜ வாழ்வில் இவர் ஒரு மத்திய அரசு ஊழியர். சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவிற்குள் நுழைந்தார்.

மேலும் சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் போன்ற திரைப்படங்களின் மூலம் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். மனோரமாவுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்து தனது காமெடி கலந்த நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே உருவாக்கினார்.

இதையும் வாசிங்க:விஜயோட செல்லப்பெயர் இதுதானா? இத்தன நாள் தெரியாம போச்சே – க்யூட்டா சொல்றாங்களே

இவரின் காமெடிகளை இன்று பார்த்தால் கூட நம்மை சிரிக்க வைக்கும். கமலஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட. அபூர்வ சகோதரர்கள், அவ்வை ஷண்முகி போன்ற பல திரைப்படங்களில் இவரை நடிக்க வைத்திருந்தார். என்னதான் அந்த கால நடிகரானாலும் இந்த கால நடிகர்களுடனும் ஈடுகட்டி நடித்தவர் நாகேஷ். பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் இவரின் காமெடிகள் மக்களை மிகவும் கவரும்வண்ணம் இருந்தன.

இவர் சினிமாவில் தனது உடன் நடிக்கும் நடிகர்களுக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுப்பாராம். இவர் பொதுவாக அடிக்கடி மரணம் பற்றிய பேச்சுகளையே பேசுவாராம். நம்மிடம் அப்பாயின்மெண்ட் வாங்காமல் வரும் ஒருவர் எமன்தான்.. எதற்காக அவர் என்னை விட்டு வைத்துள்ளாரோ.. என அடிக்கடி பேசி கொள்வாராம். இந்த தகவலை இவருடன் நடித்த பழங்கால நடிகையான வரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:உயிருள்ளவரை உஷா கங்கா காலமானார்.. திரையுலகினரை துரத்தும் மாரடைப்பு பிரச்சனை.. பிரபலங்கள் இரங்கல்

google news
Continue Reading

More in Cinema History

To Top