சிவாஜிகிட்டயே தனது வேலையை காட்டிய சந்திரபாபு… குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல…
Actor Chandrababu: சந்திரபாபு தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் இயக்குனராகவும் பாடகராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இவரின் தோற்றமே இவரின் காமெடிகளுக்கு கூடுதல் வலுவூட்டின.
குங்கும பூவே கொஞ்சும் புறாவே, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என பல பாடல்களின் மூலம் இவர் பாடகராகவும் வலம் வந்தார். இவர் தனது சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை கொண்டவராம்.
இதையும் வாசிங்க:குறுக்கே வந்த நடிகர்!.. எம்.ஜி.ஆர் நடிக்க பயந்த அந்த படம்!… ஆனால் நடந்ததே வேற!…
இவர் தன்னை விட சிறந்த நடிகர் இங்கு எவரும் இல்லை எனும் ஆணவம் கொண்டவர். இதனாலேயே இவர் பல பட வாய்ப்புகளையும் இழந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்ற பல முன்னணி நடிகர்களை கூட வாடா போடா எனதான் அழைப்பாராம். அந்த அளவிற்கு இவர் அகந்தை பிடித்தவராம்.
இவர் பதி பக்தி, சபாஷ் மீனா, அன்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் சினிமாவில் தயாரிப்பாளராக ஆசைபட்ட இவருக்கு அது கை கொடுக்கவில்லை. சொந்த வீட்டையே விற்கும் அளவுக்கு கடனில் மூழ்கிவிட்டார். என்னதான் இவர் சினிமாவில் தனது காமெடியின் மூலம் பல பேரை சிரிக்க வைத்தாலும் இவரின் நிஜ வாழ்வில் இவர் பல சோகங்களையே சந்தித்தவர். இவரின் திருமண வாழ்க்கை கூட இவருக்கு நல்லபடியாக அமையவில்லை.
இதையும் வாசிங்க:படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பிய ஜெயலலிதா!.. பதறிப்போன இயக்குனர்.. நடந்தது இதுதான்!…
இவர் ஒரு காலத்தில் மிகவும் கடனில் இருந்துள்ளார். அப்போது தேவதையை கண்டேன், மலைக்கோட்டை போன்ற திரைப்படங்களின் இயக்குனரான பூபதியின் தந்தை இவரை ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் பார்த்துள்ளார். அப்போது சந்திரபாபுவை சிவாஜியை காண போகலாம் என கூறினாராம். அதற்கு சந்திரபாபு ‘என்ன என்னை வாய்ப்பு கேட்க சொல்றீங்களா?’ என வழக்கம்போல தனது ஆணவத்தில் பேசியிருந்தாராம்.
அதற்கு அவர் உங்க நண்பர்தானே.. அதனால் போய் பார்க்கலாம் என கூறி சந்திரபாபுவை அழைத்து சென்றாராம். அப்போது சிவாஜியோ ஷூட்டிங்கில் இருந்துள்ளார். அவர் ஒரு சீனில் நடித்து கொண்டிருக்கும் போது சந்திரபாபு ‘இவ்ளோ வேணாமே… கொஞ்சம் குறைத்து கொள்ளலாமே’.. என கூறினாராம்.
உடனே சிவாஜியும் அப்படி சொல்றீங்களா.. என கூறி சந்திரபாபு கூறியபடி நடித்தாராம். பின் சந்திரபாபு உடன் வந்த பூபதியின் தந்தை ‘எதுக்காக சார் இங்கே வந்துருக்கோம்… நீங்க என்ன செய்றீங்க?’ என கேட்டாராம். அப்போது சந்திரபாபு ‘அய்யோ தப்பு பண்ணிட்டேனே’… என கூறி சிவாஜியின் நடிப்பில் கரெக்ஷன் சொன்னதை எண்ணி வருத்தப்பட்டாராம்.
இதையும் வாசிங்க:விஜய்க்கு ஷாருக்கான் செய்து கொடுத்த சத்தியம்!.. ஜவான் உருவானபோது இவ்வளவு நடந்துச்சா!..