Connect with us
jawan

Cinema News

விஜய்க்கு ஷாருக்கான் செய்து கொடுத்த சத்தியம்!.. ஜவான் உருவானபோது இவ்வளவு நடந்துச்சா!..

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அட்லி. நண்பன் படம் உருவானபோது விஜயுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. படப்பிடிப்பில் துருதுருவென இருந்த அட்லியை விஜய்க்கு பிடித்துப்போனது. அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணி படம் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனது.

அதன்பின் அட்லி சொன்ன கதை விஜய்க்கு பிடித்துபோன உருவான படம்தான் தெறி. விஜயை மாஸ் ஹீரோவாக, ஸ்டைலாக காட்டி சூப்பர் ஹிட் கொடுத்தார் அட்லி. ஏற்கனவே வெளியான படங்களை சுட்டு படம் எடுக்கிறார் என்கிற விமர்சனம் அட்லி மீது இருந்தாலும் விஜயை எப்படி காட்ட வேண்டும் என்பதில் கில்லாடி அவர்.

இதையும் படிங்க: அந்த ஹீரோ நடிக்க வேண்டிய கதையில் நடித்த அஜித்!.. அட இதெல்லாம் நமக்கு தெரியாம போச்சே!..

அதனால்தான் விஜய்க்கு அவரை பிடித்துப்போய் தொடர்ந்து மெர்சல், பிகில் என அவரின் இயக்கத்தில் 3 படங்களில் நடித்தார். இந்த 3 படங்களுமே விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படமாகும். அதனால்தான் அட்லியை எப்போதும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார் விஜய். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு பின் அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

ஏனெனில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார் அட்லி. உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. பிகில் படம் முடிந்தபோது அட்லியை ஷாருக்கான் அழைக்க ‘என்ன ஆனாலும் இந்த வாய்ப்பை நீ மிஸ் பண்ணக்கூடாது’ என சொல்லி அனுப்பினார் விஜய். மேலும், ஜவான் படம் உருவான நேரத்தில் படம் எந்த நிலையில் இருக்கிறது என அடிக்கடி அட்லியிடம் கேட்டு தெரிந்துகொள்வாராம்.

இதையும் படிங்க: ‘ஜெயிலர்’லாம் தூசு! அந்தப் படம் மட்டும் வெளிவந்திருந்தால் நெல்சனின் ரேஞ்சே வேற – இப்ப கூட வாய்ப்பிருக்கு

ஜவான் படம் உறுதியானதும் விஜயிடம் செல்போனில் பேசிய ஷாருக்கான் ‘நான் அட்லியின் இயக்கத்தில் நடிக்கப்போகிறேன். உங்கள் இயக்குனரை நன்றாக பார்த்துக்கொள்வேன். அவர் அவருக்கு பிடித்தது போலவே வேலை செய்வார். எந்த பிரச்சனையும் வராது என நான் உங்களுக்கு பிராமிஸ் செய்கிறேன். இந்த படம் முடிந்ததும் அட்லி பெரிய இயக்குனராக மாறியிருப்பார்’ என சொன்னாராம். இதை அட்லியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் சொன்னது போலவே இப்போது அட்லி பெரிய இயக்குனராக மாறிவிட்டார். அடுத்து மீண்டும் ஷாருக்கானையே இயக்குவாரா இல்லை விஜயை வைத்து இயக்குவரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்க விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர்!. இப்படியெல்லாம் நடக்குமா?!…

google news
Continue Reading

More in Cinema News

To Top