அஜித் படத்தை இயக்க விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர்!. இப்படியெல்லாம் நடக்குமா?!...

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி போல, ரஜினி - கமல் போல போட்டி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் - விஜய் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோயிசம் உள்ள அதிரடி மாஸ் ஆக்சன் கதைகளில் நடிக்க துவங்கியவர்கள்.

இருவருக்குமான தொழில் போட்டி என்பது 20 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து இருக்கிறது. விஜய் என்ன செய்கிறார் என்பதை அஜித் கவனித்துக்கொண்டே இருப்பார். அதேபோல், அஜித் என்ன செய்கிறார் என்பதை விஜய் கவனிப்பார். ஒருகட்டத்தில் இருவரும் மறைமுகமாக தங்களின் திரைப்படங்களில் மோதிக்கொண்டனர்.

இதையும் படிங்க: ரஜினியே துரத்திவிட்டாரு!.. விஜய் சிக்குவாருன்னு நினைக்கிறீங்க.. விடாமுயற்சி செய்யும் அந்த இயக்குநர்!

தான் நடிக்கும் படங்களில் மறைமுகமாக அஜித்தை திட்டி விஜய் வசனம் பேசுவார். விஜய்க்கு பதிலடி கொடுக்கும்படி தனது படத்தில் பாடல் வரிகளை வைப்பார் அஜித். ஆனால், ஒருகட்டத்தில் இருவருக்கும் பக்குவம் வந்துவிட்டது. இருவரும் தங்களின் பாதைகளில் பயணிக்க துவங்கிவிட்டனர். மாஸ்டர் பட விழாவில் கோட் சூட் போட்டு வந்த விஜய் ‘நண்பர் அஜித் போல இருக்கிறதா’ எனக்கேட்டு அதிர வைத்தார். அதேபோல், லியோ படவிழாவில் ‘தலன்னா ஒருத்தர்தான்’ என பேசினார்.

அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு சொன்ன கதை என்பது பலருக்கும் தெரியாது. 2 வருடங்களுக்கு முன்பு விஜயிடம் 3 கதைகளை மகிழ் திருமேனி சொன்னார். மூன்றுமே அவருக்கு பிடித்திருந்தது. ‘இதில் எதை வேண்டுமானாலும் எடுங்கள்.. உங்கள் இஷ்டம்’ என சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: அந்த படத்துல கூட வாய்ப்பு கேட்டேன்!. ஆனா விஜய் கொடுக்கல!.. அதிரவைத்த ஷோபா சந்திரசேகர்..

ஆனால், சில காரணங்களால் மகிழ் திருமேனியால் விஜய் படத்தை இயக்க முடியவில்லை. அதில் ஒரு கதை அஜித்துக்கு பிடித்துப்போக அது விடாமுயற்சியாக மாறியுள்ளது. இந்த ஆஃபர் வந்தவுடனேயே விஜயை தொடர்பு கொண்டு ‘இந்த கதையில் அஜித்தை வைத்து எடுக்கவிருக்கிறேன். உங்களுக்கு சம்மதமா?’ என மகிழ் திருமேனி கேட்க ‘தாராளமா பண்ணுங்க’ என கிரீன் சிக்னல் கொடுத்தார் விஜய். அதன்பின்னர்தான் விடாமுயற்சி டேக் ஆப் ஆனது.

ஆனால், அஜித் - விஜய் ரசிகர்கள் இது புரியாமல் சமூகவலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் ட்ரோல் செய்து, கிண்டலடித்தும், சண்டையிட்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…

 

Related Articles

Next Story