சரத்குமார் மீது செம கடுப்பில் இருந்த விஜயகாந்த்… கடைசில நடந்தது இதுதான்!..

Published on: November 14, 2023
sarathkumar
---Advertisement---

Sarathkumar: சரத்குமார் தமிழ் சினிமாவின் 80ஸ்,90ஸ்களில் முன்னணியில் இருந்த நடிகர். இவர் இன்று கூட அனைவராலும் ரசிக்கப்படும் எவர்கிரீன் நடிகர் என்று கூறலாம். தனது நடிப்பின் மூலம் ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சரத்குமார்.

இவர் தமிழில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் நாட்டாமை, சூரியன், சிம்மராசி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே உருவாக்கினார். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:முதன்முதலா பார்த்ததும் படப்பிடிப்பில் உளறிய காமெடி நடிகர் – ‘இடியட்’னு திட்டிய மணிரத்னம்!..

இவரின் நடிப்புக்கென பல ரசிகர்களும் உண்டு. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன. ஆக்‌ஷனிலும் சரி, வில்லனாகவும் சரி, செண்டிமெண்டிலும் சரி எந்தவொரு கதாபாத்திரமாக நடித்தாலும் மிகவும் அர்ப்பணிப்புடன் நடிப்பவர் சரத்குமார்.

இவர் இன்றுவரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன், வாரிசு போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் பொதுவாக தன்னை சந்திக்கவரும் பத்திரிக்கையாளர்களிடம் மிகவும் அன்பாக பழகுவாராம்.

இதையும் வாசிங்க:சரவெடியாய் வெடித்த எம்ஜிஆர்… கலங்கி போன படக்குழு… எதுக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…

இவரை போலவே விஜயகாந்த்தும் பத்திரிக்கையாளார்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். சரத்குமார் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் போது விஜயகாந்துக்கு அவர் மேல் கடுப்பு ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளார்கள் சரத்குமாரை நல்லவிதமாக எழுதுவது அவருக்கு பிடிக்கவில்லை.

புலன் விசாரணை திரைப்படத்தில் சரத்குமாரை வில்லனாக அறிமுகப்படுத்தியதே விஜயகாந்த்தான். எனினும் அவர் இப்படி வளர்வது பிடிக்காத விஜயகாந்த் வாஞ்சிநாதன் படத்தின் பத்திரிக்கையாளார் சந்திப்பின் போது பத்திரிக்கையாளார்களை கிண்டலடித்து பேசியுள்ளார். உடனே வலைபேச்சு பிஸ்மி பத்திரிக்கையாளர்களை இகழ்ந்து பேச உங்களுக்கு உரிமை இல்லை என அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தாராம்.

இதையும் வாசிங்க:ஊரு ஆயிரம் பேசட்டும்!… ஆனா தலைவரோட வழி தனி வழி!… சம்பவம் என்னன்னு தெரியுமா?..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.