Connect with us
mgr

Cinema History

சரவெடியாய் வெடித்த எம்ஜிஆர்… கலங்கி போன படக்குழு… எதுக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…

MGR: தமிழ் சினிமாவில் நடிப்பினால் மட்டுமல்லாமல் தனது சொந்த நடவடிக்கைகளின் மூலமும் மக்களை கட்டிபோட்டவர் எம்ஜிஆர். இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கும் ஆரம்பத்தில் துணைகதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புதான் அமைந்தது.

பின் நவரத்னம் திரைப்படத்தின் மூலம் இவருக்கு கதாநாயகனாய் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இவர் தனது தனி வாழ்வில் மிகச்சிறந்த மனிதரும் கூட. தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வார். அரசியல் மீது ஆர்வம் கொண்டு இவர் தேர்தலையும் எதிர்கொண்டார்.

இதையும் வாசிங்க:தக்காளிய வச்சு குட்டி ஸ்டோரி சொன்ன ரஜினிகாந்த்… யாருக்கு சொன்னாரு தெரியுமா?…

தனது நற்குணத்தினால் மூன்று முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார். இவர் பொதுவாக தன்னுடன் நடிக்கும் நடிகர்களையும் தன் படங்களில் பணியாற்றும் ஊழியர்களையும் மிகவும் மதிக்கக்கூடியவர். இவர் பொதுவாக தனது சாப்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவாராம். அதைப்போல் தன்னுடன் இருக்கும் சக மனிதர்களுக்கும் சிறப்பான உணவுகளை வழங்கவேண்டும் என நினைப்பாராம்.

ஒரு நாள் இப்படிதான் இவரது உழைக்கும் கரங்கள் படபிடிப்பின்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்ஜெட் கருதி அப்படத்தின் நடிகர் நடிகைகளுக்கு மட்டும் உயர்தர சாப்பாடும் மற்றவர்களுக்கு சாதாரண சாப்பாடும் வழங்கப்படுள்ளது. உடனே படத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வந்து எம்ஜிஆரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையும் வாசிங்க:சாவித்ரிக்கு ஆசையாய் ஜெமினி கொடுத்த கிப்ட்… தல தீபாவளிக்கு கூட இப்படியா பண்ணுவீங்க…

எம்ஜிஆரும் சரி நான் பார்த்து கொள்கிறேன், நீங்கள் செல்லுங்கள் என கூறிவிட்டாராம். ஒரு நாள் மதிய வேளையில் அவர் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் வந்து உட்கார்ந்தாராம். அப்போது சாப்பாடு பரிமாறுபவர்கள் ஐயா உங்களுக்கு சாப்பாடு உள்ளே உள்ளது என கூறினாராம். உடனே எம்ஜிஆர் அதுக்கென்ன அனைவருக்கும் ஒரே சாப்பாடுதானே, இங்கு இருந்தே சாப்பிடுகிறேன்.. பரிமாறுங்கள் என கூறினாராம்.

உடனே சாப்பாடு பரிமாறுபவர் பயத்தில் கலங்கி போய் நின்றாராம். பின் அனைவருக்கும் வழங்கும் சாப்பாட்டையே எம்ஜிஆருக்கும் வழங்கினாராம். முட்டை மட்டும்தான் அதில் இருந்ததாம். அதை பார்த்த எம்ஜிஆருக்கு சரியான கோபம் வந்ததாம். பின் அங்கு இருப்பவர்களை திட்டியுள்ளார். படத்தில் எங்களை விட அதிகமாக உழைப்பவர்கள் அவர்கள்தான். அவர்களுக்குதான் தரமான சாப்பாட்டினை வழங்கவேண்டும் என கண்டித்தாராம். தயாரிப்பு நிறுவனத்திடம் பணம் இல்லையென்றால் எனது கணக்கில் எழுதிகொள்ளுங்கள். என் சம்பளத்தில் கழித்து கொள்ளலாம் என கூறினாராம். எம்ஜிஆரின் இந்த செயலுக்கு பின் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு வழங்கப்பட்டதாம்.

இதையும் வாசிங்க:ஒரே பாடலில் அசந்து போன சிவாஜி கணேசன்.. இந்த பாடகர் தான் எனக்கு வேணும்.. அடம் பிடித்த சூப்பர் சம்பவம்..!

google news
Continue Reading

More in Cinema History

To Top