இதனால் தான் கலாபவன் மணி இறந்தார்.. 6 வருடத்துக்கு பின்னர் வெளியான ஷாக் தகவல்..!

Published on: November 14, 2023
---Advertisement---

Kalabhavan Mani: மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு பெரிய தாக்கத்தினை உருவாக்கியவர் தான் கலாபவன் மணி. ஆனால் அவர் திடீரென இறந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மரணத்தில் இருந்த சந்தேகம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

மிமிக்ரி ஆர்டிஸ்ட்டான கலாபவன் மணி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். தமிழில் ஜெமினி படம் அவருக்கு ஒரு பெரிய அடையாளத்தினை கொடுத்தது. மலையாளத்தில் எக்கசக்க படங்களில் நடித்து வந்தவர். தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் பிஸியாக நடித்து வந்தார். இப்படி பிஸியாக இருந்த போது அவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது.

இதையும் படிங்க: புருஷனுக்காக களத்தில் இறங்கிய மீனா… முத்து இப்பையாது புரிஞ்சிக்கோப்பா.. சிக்கப்போகும் சத்யா?

கடந்த 2016ம் ஆண்டு கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரினர். அந்த விசாரணை நடைமுறை தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் சிபிஐ அதிகாரி உன்னிராஜன் இதுகுறித்து சில உண்மைகளை தெரிவித்து இருக்கிறார்.

அதில், கலாபவன் மணிக்கு சுகர் பிரச்னை இருந்தது. காலை, இரவு என இருவேளையும் மாத்திரை சாப்பிட்டு கொண்டு இருந்தார். ஆனாலும் தினமும் 12 அல்லது 13 பீர் வரை தொடர்ந்து குடித்து இருக்கிறார். அப்போது அவருக்கு சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்ட போதும் நிறுத்தாமல் குடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: டாக்டர் ஓகே சொன்ன பிறகு ஷூட்டிங் வந்த நடிகர்!.. தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரின் நல்ல மனசு!..

அதுமட்டுமல்லாமல் பீரில் இருக்கும் மெத்தில் ஆல்கஹால் கம்மியாக தான் இருக்கும். ஆனால் அவர் அளவுக்கு அதிகம் பீரை எடுத்து கொண்டதால் அவர் உடலில் மெத்தில் அளவு அதிகரித்தது. மேலும், சுகர் மாத்திரையுடன் இந்த ஆல்கஹால் சேரும் போது அவருக்கு பக்கவிளைவினையும் தந்தது. அதை அவர் யாரிடமும் சொல்லவில்லை.

இறந்த அன்று கூட அவர் 12 அல்லது 13 பீரை எடுத்து இருக்கிறார். அதனால் தான் அவருக்கு அப்போ ரத்தவாந்தி வந்து இருக்கிறது. இருந்தும் அவர் பீரையே எடுத்து கொண்டதால் தான் இறந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 6 வருடம் கழித்து இந்த வழக்கின் உண்மையை கூறி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.