புருஷனுக்காக களத்தில் இறங்கிய மீனா… முத்து இப்பையாது புரிஞ்சிக்கோப்பா.. சிக்கப்போகும் சத்யா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வேறு பைனான்சியரிடம் கார் கேட்க பழைய பைனான்சியர் கொடுக்க கூடாது எனச் சொன்ன விஷயத்தினை கூறுகிறார். இதனால் அதிர்ச்சி ஆகிவிடுகிறார் முத்து. பிறகு விஜயா முத்து என்ன சொல்லிட்டு போனான் என்கிறார்.

இதையடுத்து மீனா கிளம்புறேன் எனக் கூறிவிட்டு சென்றார் என்கிறார். என்ன நக்கலா எனக் கடுப்பாகி விடுகிறார் விஜயா. இதையடுத்து ரோகினி என்னோட ஷேரை கொண்டு வரேன் எனக் கூறி ரூமுக்குள் செல்கிறார். பாரு வீட்டு செலவுக்கும் கொடுத்து அவ ஷேரையும் கொடுக்கிறா என்கிறார். இந்த மாதம் காசு கொடுக்காம ஓசியிலையே சாப்பிடலாம்னு ஐடியாவா என்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் இறங்கி வருவார்.. விஜய் கார் கண்ணாடி ஏத்திட்டு போயிடுவார்!.. பத்திரிக்கையாளர் பேட்டி..

இதனால் மீனா நான் போய் வாங்கிட்டு வரேன் எனக் கிளம்பி செல்கிறார். இதற்கிடையில் முத்துவிற்கு தெரிந்த ஒருவர் கார் துடைக்க ஆட்கள் தெரியுமா எனக் கேட்கிறார். 20 கார் ஒரு நாளைக்கு 2000 என்கிறார். அவர் தானே செய்வதாக சொல்லி அந்த வேளையில் சேர்ந்து விடுகிறார்.

தனக்கு தெரிந்த அடகுகடைக்கு போய் பார்க்க அவர் கடை பூட்டி இருக்கிறது. இதனால் மீனாவுக்கு என்ன செய்கிறது எனத் தெரியவில்லை. இதனால் தன் தம்பி சத்யாவை அழைத்து வளையலை தெரிந்த கடையில் வைத்து வாங்கி வரச் சொல்கிறார்.

இதையும் படிங்க: வேற படமா வெளிவந்த விஜயகாந்தின் ‘அக்கா புருஷன்’ - இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

இதையடுத்து சத்யா சிட்டி ஆபிஸ் போய் நகையை வைத்து பத்தாயிரம் கேட்கிறார். ஆனால் சிட்டி வளையல் எல்லாம் வேணாம். இந்த காசை போய் அக்காவிடம் கொடு என்கிறார். அவரும் அந்த காசை வாங்கி கொண்டு போய் மீனாவிடம் கொடுக்கிறார்.

நகை வச்ச ரசீதை கேட்கிறார் மீனா. என்கிட்ட தான் இருக்கு வேணுமா என சத்யா பொய் கூறுகிறார். நீயே வச்சிக்கோ. நீ தானே மீட்க போற என்கிறார். முத்து விறுவிறுப்பாக கார் துடைத்து கொண்டு இருக்க இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

 

Related Articles

Next Story