Actor suriya: தமிழில் 80களில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் சிவக்குமார். இவரின் மூத்த மகன்தான் சரவணன். நேருக்கு நேர் படத்தை வஸந்த் இயக்கிய போது அதில் விஜயும், அஜித்தும் இணைந்து நடித்தனர். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து அஜித் விலகினார்.
அவருக்கு பதில் சரவணனனை ஹீரோவாக நடிக்க வைத்தார் வஸந்த். அதோடு, அவரின் பெயரை சூர்யா எனவும் மாற்றினார். முதல் படத்தில் சூர்யாவுக்கு நடிப்பே வரவில்லை. கேமரா முன்பு எப்படி நிற்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை. பலரும் சொல்லிக்கொடுக்க முடிந்தவரை முயற்சி செய்து நடித்து முடித்தார்.
இதையும் படிங்க: 20 வருஷம் கழிச்சி அதே ரிஸ்க்கை எடுக்கும் சியான் விக்ரம்!.. அடுத்த பாலாவாக மாறிய ரஞ்சித்…
அஜித்தை போலவே அவரும் சாக்லேட் பாயாகவே பார்க்கப்பட்டார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும், எதிலும் சூர்யாவின் நடிப்பு மெருகேறவில்லை. முகத்தில் உணர்ச்சிகளை காட்டமுடியாத ஒரு சாக்லேட் பாயாக நின்றார். அப்போதுதான் பாலா இயக்கத்தில் சேது படம் வெளிவந்தது.
அந்த படத்தை பார்த்த சூர்யா நேராக பாலாவிடம் ஓடி ‘அண்ணே என்ன வச்சி ஒரு படம் எடுங்க’ என வாய்ப்பு கேட்டார். சேது படத்தில் சிவக்குமார் நடித்து கொடுத்ததால் அதற்கு நன்றிக்கடனாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை எடுக்க பாலாவும் முடிவு செய்தார். அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா.
இதையும் படிங்க: மிஷ்கின் ஒரு டெவில்!.. அவனுக்கு முன்னாடி நான்லாம் ஒண்ணுமே இல்லை!.. பாராட்டிய பாலா!..
சூர்யாவை முழுக்க முழுக்க வேறுமாதிரி காட்ட வேண்டும் என முடிவெடுத்தார் பாலா. ஆனால், படப்பிடிப்பில் முதல் 4 நாட்கள் சூர்யாவுக்கு நடிப்பே வரவில்லை. கோபத்தின் உச்சிக்கே போனார் பாலா. தான் என்ன மாதிரி நடிக்க வேண்டும் என பாலா விரும்புகிறார் என்பதே சூர்யாவுக்கு புரியவில்லை. அந்த படத்தில் இணை இயக்குனராக வேலை செய்தவர் இயக்குனர் அமீர்.

அவர்தான் சூர்யாவை தனியே அழைத்து சென்று பாலாவுக்கு என்ன வேண்டும்? எப்படி நடிக்க வேண்டும்?.. எப்படி பார்க்க வேண்டும்? என எல்லாவற்றையும் சூர்யாவுக்கு சொல்லி கொடுத்தார். அதன்பின் அதிக ரீடேக் வாங்காமல் நடித்தார் சூர்யா. அதன்பின் அதே அமீர் இயக்கத்தில் ‘மௌனம் பேசியதே’ படத்தில் சூர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 20 வருஷத்துக்கு முன்னாடி சிக்குனது சியான்!.. இப்ப நீதான்!.. அருண் விஜயை வச்சும் செய்யும் பாலா!..