20 வருஷத்துக்கு முன்னாடி சிக்குனது சியான்!.. இப்ப நீதான்!.. அருண் விஜயை வச்சும் செய்யும் பாலா!..
Vanangan movie: பாலா எடுக்கும் படமென்றாலே கதாநாயகனின் கதி அவ்வளவுதான். அழகாக இருக்கும் ஹீரோக்களின் முகத்தில் கரியை பூசி அசிங்கமாக மாற்றி, சாக்குபோல ஒரு உடையை கொடுத்து படம் முழுவதும் நடிக்க வைப்பார். நேருக்கு நேர் படத்தில் அழகாக பார்த்த சூர்யாவை நந்தா படத்தில் பார்த்தவர்கள் அதிர்ந்து போயிருப்பார்கள்.
மொட்டையடித்து, கண்களில் காண்டாக்ட் லென்ஸ் வைத்து உருவத்தையே மாற்றியிருப்பார். காக்க காக்க படத்தில் ஹேண்ட்சம்மாக வந்த சூர்யாவை பிதாமகனில் மொத்தமாக உருவத்தை மாற்றி நடிக்க வைத்தார். அந்த படத்தில் விக்ரமுக்கு பாலா கொடுத்த வேடம் எப்படி என்பதை சொல்லவே தேவையில்லை.
இதையும் படிங்க: மிஷ்கின் ஒரு டெவில்!.. அவனுக்கு முன்னாடி நான்லாம் ஒண்ணுமே இல்லை!.. பாராட்டிய பாலா!..
பிறந்தது முதல் சுடுகாட்டில் வளர்ந்து பேசவே வராத வேடத்தில் சியான் விக்ரமை நடிக்க வைத்திருப்பார். அந்த படத்தில் அவருக்கு வசனமே இருக்காது. படத்தின் இறுதிக்காட்சியில் ‘சக்தி கொடு’ என்கிற ஒரு வசனத்தை மட்டுமே பேச வைத்திருப்பார். அதேநேரம், அந்த படத்திற்கு விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
அதேபோல், பரதேசி படத்தில் அதர்வாவையும் வச்சி செய்திருப்பார் பாலா. மேலும், அவன் இவன் படத்தில் ஆர்யா - விஷாலுக்கு பாலா கொடுத்த கெட்டப்பை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். ஷூட்டிங் முடிந்ததும் ‘ஆளை விட்டால் போதும்’ என இருவரும் தலைதெறிக்க ஓடினார்களாம். இதை பாலாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இப்போது அருண் விஜயை வைத்து அவர் இயக்கியுள்ள படம் வணங்கான். இந்த படத்தில்; அருண்விஜய் வாய் பேசமுடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளாராம். எனவே, இந்த படத்தில் அவருக்கு வசனங்களே கிடையாது. அவரை பாலா என்ன செய்து வைத்திருப்பார் என்பது படத்தை பார்த்தால்தான் தெரியும்.
நல்லவேளை இந்த படத்திலிருந்து சூர்யா எஸ்கேப் ஆகிவிட்டார்!...
இதையும் படிங்க: பாலா முன்னாடி மீசையை முறுக்கிட்டு நின்னா சும்மா விடுவாரா? படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட நிலைமை