Cinema History
சாதாரணமாக கேட்ட சிவாஜி!.. அவமானமாக எடுத்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..
Mgr sivaji: எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே சிறுவயது முதலே நாடகங்களில் பல வருடங்கள் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தனர். எம்.ஜி.ஆர் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன்பின்னர் ராஜகுமாரி என்கிற படம் மூலம் ஹீரோவாக மாறினார். ஆனால், சிவாஜியோ முதல் படமான பராசக்தியிலேயே ஹீரோவாக நடித்தார்.
துவக்கத்தில் எம்.ஜி.ஆரும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள குடும்ப செண்டிமெண்ட் கதைகளில் நடித்து வந்தார். ஒருபக்கம் சிவாஜியும் அதுபோன்ற வேடங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் கத்திச்சண்டை, வாள் சண்டை போன்ற ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் கதைகளில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க எம்.ஜி.ஆர் என்னை ஜெயித்துவிட்டார்!. சிறையில் இருக்கும்போதே சொன்ன எம்.ஆர்.ராதா!..
அதன்பின் அதையே தனது ரூட்டாக பிடித்துக்கொண்டார். எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அவரிடம் அதைத்தான் எதிர்பார்த்தனர். எனவே, தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்தார். சிவாஜியோ செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் குடும்ப கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தார். அவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள்.
சில படங்களில் எம்.ஜி.ஆரும் சிவாஜியை போல செண்டிமெண்ட் காட்சிகளில் நடிக்க அதைப்பார்த்த சிவாஜி ஒருமுறை எம்.ஜி.ஆரை பார்த்தபோது ‘அண்ணே நீங்க கையில் கத்தி எடுத்தாலே கைத்தட்டி ரசிகர்கள் ரசிப்பாங்க. நீங்க கோட்டு சூட்டு போட்டு நடிக்கணுமா’ என கேட்டுவிட்டாராம். சிவாஜி சாதாரணமாக கேட்டாலும் எம்.ஜி.ஆர் அதை அவமானமாக எடுத்துக்கொண்டாராம்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டத்தை கொடுத்தது யார் தெரியுமா? எந்த நடிகருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலையே!..
அவர் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. சிவாஜியை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தன்னை வைத்து படமெடுக்க வைக்க வேண்டும் என நினைத்தார். அதன் விளைவு சிவாஜியை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இயக்கிய பந்துலு எம்.ஜி.ஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்தார்.
அதேபோல், சிவாஜியை வைத்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் என பல ஹிட் படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் நவரத்தினம் என்கிற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். இந்த படம் 1977ம் வருடம் வெளியானது. அதேபோல், சிவாஜியை வைத்து சிவந்த மண் படமெடுத்து நஷ்டமடைந்த இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
அதேநேரம், பந்துலு, ஏபி.நாகராஜன் மற்றும் ஸ்ரீதர் அனைவரையுமே எம்.ஜி.ஆர் தேடிப்போகவில்லை. சில காரணங்களால் அவர்களே எம்.ஜி.ஆரிடம் சென்றனர். அதை எம்.ஜி.ஆரும் பயன்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிக்க ஓகே சொன்ன சிவாஜி.. ஆனாலும் ரிஜெக்ட் செய்த சேரன்!.. இதுதான் காரணமா?..