Connect with us
nagesh2

Cinema History

எம்.ஜி.ஆர் என்னை ஜெயித்துவிட்டார்!. சிறையில் இருக்கும்போதே சொன்ன எம்.ஆர்.ராதா!..

Mr radha mgr: நாடக நடிகராக மக்களிடம் பிரபலமாகி பின்னர் சினிமாவுக்கு வந்தவர்தான் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் நடிக்கும்போது இவரின் நாடகங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இத்தனைக்கும் தனது நாடகங்களில் கடவுள் நம்பிக்கையை விமர்சிப்பார். நாத்திக கருத்துக்களை சொல்வார். ஆனாலும் மக்கள் அவரை ரசித்தனர்.

சர்ச்சையான விஷயங்களை நாடகங்களாக போடுகிறார் என இவர் மீது புகார் கொடுக்கப்பட்டு தடை விதித்த சம்பவமெல்லாம் நடந்தது. ஆனால், எப்போதும், யாருக்கும் எம்.ஆர்.ராதா பயந்தவர் இல்லை. கரகரப்பான குரல், தலையை ஆட்டி ஆட்டி அவர் வசனம் பேசும் ஸ்டைல், வித்தியாசமான உடல் மொழி என ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்..

வில்லன், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என 50,60களில் சினிமாவில் கோலோச்சியவர் இவர். எம்.ஜி,ஆர், சிவாஜி ஆகியோரின் பல படங்களில் நடித்திருக்கிறார். எப்போதும் மனதில் பட்டதை யோசிக்காமல் பேசுவது எம்.ஆர்.ராதாவின் ஸ்டைல். ஒரு படத்தின் தயாரிக்கும்போது கொடுக்கல், வாங்கல் தொடர்பாக எழுந்த அந்த பிரச்சனையில் எம்.ஜி.ஆரை பார்க்க போன எம்.ஆர்.ராதா அவரை துப்பாக்கியால் சுட்டார். அந்த குண்டு எம்.ஜி.ஆரின் கழுத்தில் பாய்ந்தது. பதிலுக்கும் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவை சுட்டார். இதில், ராதாவும் காயமடைந்தார்.

இது எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையிலும், சினிமா கேரியரிலும் கரும்புள்ளியை ஏற்படுத்தியது. சில வருடங்கள் சிறையில் இருந்தார். அதன்பின் அவர் அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரை புரிந்துகொள்ளாமல் தான் நடந்துகொண்டதாக அவருக்கு நெருக்கமான சிலரிடம் அவரே பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: உங்களாலதான் படம் ரிலீஸாகவே இல்ல!. வாலியிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..

நெல்லை ஜெபமணி என்கிற ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். ஒரு அரசியல் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர் சிறைக்கு சென்றபோது அங்கே எம்.ஆர்.ராதவிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் எம்.ஆர்.ராதா ‘எம்.ஜி.ஆர் என்னை ஜெயித்துவிட்டார்’ என சொன்னாராம். அதற்கு ஜெபமணி ‘என்ன சொல்கிறீர்கள். உங்கள் இருக்கும் இடையே சண்டை ஆயிற்றே’ என கேட்டுள்ளார்.

அதற்கு ராதா ‘இருவரும் கோபப்பட்டு சுட்டுக்கொண்டோம். கழுத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை தூக்கி செல்கிறார்கள். அப்போதும் ‘அண்ணன்னை பாருங்க’… ‘அண்ணனை பாருங்க’ என அவர் சொன்னார். யாருக்கு அந்த மனசு வரும்?. அந்த நிமிடத்தில் எம்.ஜி.ஆர் என்னை ஜெயித்துவிட்டார். ஒரு கெட்டவனையும் எம்.ஜி.ஆர் நல்லவனாக மாற்றிவிடுவார்’ என எம்.ஆர். ராதா சொன்னாராம்.

இதையும் படிங்க: கஷ்டப்படும்போது இப்படித்தான் இருந்தேன்!… படப்பிடிப்பில் அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்..

google news
Continue Reading

More in Cinema History

To Top