எம்.ஜி.ஆர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்..

by சிவா |
spb
X

MGR and spb: ஆந்திராவை சேர்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திறமையை கண்டு ‘நீ தமிழ் சினிமாவில் பாட வேண்டும்’ என சொல்லி அவரை ஊக்குவித்தவர் பின்னணி பாடகி ஜானகிதான். அதன்பின் எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் பல இசையமைப்பாளர்களை சந்தித்து எஸ்.பி.பி. வாய்ப்பு கேட்டார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை பாட எம்.ஜி.ஆர் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு, ஜெமினி நடித்த ‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளையக்கன்னி’ பாடலை எஸ்.பி.பி பாடிவிட்டார். ஆனால், ஆயிரம் நிலவே வா பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுவதற்கு முன் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரொமான்ஸ் சீன் எடுக்கும்போது சாரி கேட்டா எப்படி?!.. சரோஜாதேவியிடம் Fun பண்ணிய எம்.ஜி.ஆர்…

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.பி.பி ‘என் உடலை பாதிக்கப்பட்டு சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தேன். எனவே, ஆயிரம் நிலவே வா பாடலை வேறு ஒருவர் பாடியிருப்பார் என நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆர் எனக்காக காத்திருந்தது அப்புறம்தான் எனக்கு தெரிந்தது.

அதோடு, அந்த பாடலை பாட நான் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனபோது திருவிழா போல இருந்தது. எல்லா பத்திரிக்கையாளர்களும் இருந்தார்கள். மேலும், தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள் அங்கே இருந்தார்கள். இது எல்லாமே எம்.ஜி.ஆரின் ஏற்பாடு. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இதையும் படிங்க: கஷ்டப்படும்போது இப்படித்தான் இருந்தேன்!… படப்பிடிப்பில் அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்..

பதட்டமாக இருந்தாலும் அந்த பாடலை பாடி முடித்துவிட்டேன். என்னை வெளியே அழைந்து வந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்த எல்லோருக்கும் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், ‘இந்த பையன் நன்றாக பாடுவான். எனது படத்தில் இப்போது பாடியிருக்கிறான். நான் உங்களை அழைத்தது உங்கள் படத்தில் எல்லா பாடல்களையும் இவனுக்கு கொடுக்க வேண்டும் என சொல்வதற்காக இல்லை’

ஒரு படத்தில் ஒரு பாடலையாவது பாட வாய்ப்பு கொடுங்கள்’ என எனக்காக எம்.ஜி.ஆர் வாய்ப்பு கேட்டார். எனக்காக அவர் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல், வாய்ப்பு கேட்கவும் தேவையில்லை. ஆனால், அவர் அதை செய்தார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்’ என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் புகை, மது அருந்தாமல் இருந்ததற்கு காரணமான சம்பவம்!. இவ்வளவு நடந்திருக்கா!…

Next Story