எம்.ஜி.ஆர் புகை, மது அருந்தாமல் இருந்ததற்கு காரணமான சம்பவம்!. இவ்வளவு நடந்திருக்கா!...

Actor mgr: சினிமா நடிகர்களில் கோடு போட்டு, சில கொள்கைகளோடு நடித்த நடிகர்களில் எம்.ஜி.ஆர் முக்கியமானவர். ஏழைகளுக்கு உதவுவது, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது என சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜ வாழ்விலும் இருந்தார். பல வருட நாடக அனுபவம் அவரை பல அனுபவத்திற்கு உட்படுத்தியது.
சிறுவயது முதலே வறுமையை பார்த்த எம்.ஜி.ஆர் நாம் பணம் சம்பாதிக்கும்போது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என நினைத்தார். மேலும், சினிமாவில் வளரும் நேரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன அறிவுரை காரணமாகவும் பல நல்ல பழக்கங்களையும், பிறருக்கு உதவி செய்வதையும் கற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…
சினிமாவில் சிகரெட் பிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ காட்சிகளில் எம்.ஜி.ஆர் நடிக்கவே மாட்டார். துவக்கத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே அப்படி நடித்தார். அவருக்கென ரசிகர் கூட்டம் உருவானபின் அதுபோன்ற காட்சிகளில் அவர் நடிக்கவே இல்லை. அப்படியே நடித்தாலும் அது தவறு என்பது போல காட்சி வைத்துவிடுவார். அதற்கு அவர் சொன்ன காரணம் ‘என் படம் பார்க்கும் ரசிகன் எம்.ஜி.ஆரே புகை பிடிக்கிறார்.. எம்.ஜி.ஆரே குடிக்கிறார் என என்னை தவறான முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என சொன்னார்.
1938ம் வருடம் ‘தட்சயக்ஞம்’ என்கிற திரைப்படத்தை தயாரித்து நடித்தவர் நடராஜ பிள்ளை. இந்த படத்தில் தனக்கும் வாய்ப்பு கொடுக்கும்படி எம்.ஜி.ஆர் அவரிடம் கேட்டார். எம்.ஜி.ஆருக்கு பரமசிவன் வேஷமும் கிடைத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்கழி மாதம் கடும் குளிரில் நடைபெற்றது. நடராஜ பிள்ளைக்கு ஆஸ்துமா இருந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கலைஞர் மகனுக்கு வாலி எழுதிய பாடல்!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி…
அவரை பார்க்க எம்.ஜி.ஆர் சென்ற நேரத்தில் ‘நீங்கள் மது அருந்தினால் மூச்சுத்திணறல் குறையும்’ என மருத்துவர்கள் சொல்ல நடராஜ பிள்ளையோ அதை மறுத்தார். அங்கிருந்த எம்.ஜி.ஆர் ‘மதுவை மருந்து என நினைத்து குடியுங்கள்’ என சொல்ல, நடராஜபிள்ளை ‘நான் காந்திய வழியில் கதர்சட்டை அணிபவன். அது மருந்தாக இருந்தாலும் மதுவை தொட மாட்டேன்’ என சொன்னாராம்.
மேலும் எம்.ஜி.ஆரின் கையை பிடித்துக்கொண்டு ‘நீயும் உன் வாழ்நாளில் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.. இது என் மேல் சத்தியம்’ எனவும் சொன்னாராம். இந்த சம்பவம் எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாக பதிந்துபோய் தன் வாழ்வில் சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் இல்லாமலே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!…