எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!...

Actor Sivaji Ganesan: சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பழம்பெறும் நடிகர்களில் ஒருவர். இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இவரின் முதல் படமே இவருக்கு வெற்றிபடமாகவும் அமைந்தது. சினிமாவிற்கு வருவதற்கு முன் இவர் பல மேடைகளில் நாடகங்களில் நடித்துள்ளார்.

தனது ஒப்பற்ற நடிப்பின் மூலம் மக்கள் மனதை கட்டி போட்டவர் நடிகர் திலகம். இவர் இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவும் குணமுடையவர். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என நினைப்பவர். இவர் ஒரு முறை இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக இலங்கைக்கே சென்று இசைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார். அதில் அவர் பெற்ற தொகையை ஈழத்தமிழர்களுக்காக மேடையிலேயே கொடுத்தார்.

இதையும் வாசிங்க:எதிர்மறையான கதாபாத்திரத்தில் கலக்கிய சிவாஜி கணேசன்… எந்த படத்துலனு தெரியுமா?…

இவர் மேலும் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கர்ணன், பாசமலர் போன்ற திரைப்படங்கள் இவரின் பெயரை சொல்லும். என்னதான் இவர் பழைய நடிகராக இருந்தாலும் இந்த கால நடிகர்களுக்கு நடிப்பில் ஈடு கொடுத்தவர். என் ஆசை ராசாவே, படையப்பா போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகை ஜெயலலிதாவுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா தனது முதல் அரங்கேற்றத்தையே சிவாஜி முன்னிலையில் தான் நடத்தினாராம். அந்த நிகழ்வின் போது சிவாஜி ஜெயலலிதாவை நீ வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வருவாய் என வாழ்த்தினாராம்.

இதையும் வாசிங்க:பில்டிங்தான் ஸ்டாராங்… ஆனா பேஸ்மெண்ட் ரொம்ப வீக் போல… சின்மயி உடைத்த சீக்ரெட்…

இவர்கள் இருவரும் இணைந்து மோட்டார் சுந்தரம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் இப்படத்தில் ஜெயலலிதா இவருக்கு மகளாய் நடித்திருந்தார். பின் இருவரும் கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.

இப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்ததில் தான் மிகவும் பெருமை படுவதாகவும், எவர் ஒருவர் நடிக்க விருப்பினாலும் அவர்களுக்கு சிவாஜிதான் மிகப்பெரிய பயிற்சி நிலையம் எனவும் ஜெயலலிதா சிவாஜி கணேசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் சிவாஜி ஒரு தீர்க்கதரிசி எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார். என்னதான் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் நடித்த ஓரிரு திரைப்படங்களின் மூலம் இவர் சிவாஜியை இந்த அளவு புரிந்து வைத்துள்ளார்.

இதையும் வாசிங்க:மோனிகா சொல்றது பொய்! இமான் கூடவே இருந்த எனக்கு எல்லாமே தெரியும் – பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்

 

Related Articles

Next Story