Connect with us
sivaji ganesan

Cinema History

எதிர்மறையான கதாபாத்திரத்தில் கலக்கிய சிவாஜி கணேசன்… எந்த படத்துலனு தெரியுமா?…

Actor SivajiGanesan: தமிழ் சினிமாவின் நடிகர் திலகமாக திகழ்பவர் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் மேடை கலைஞராக இருந்த இவர் பின் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் நடித்த பராசக்தி திரைப்படமே இவருக்கு பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவரும் இணைந்து பல நாடகங்களிலும் படங்களிலும் நடித்துள்ளனர்.

படிக்காத மேதை, கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல திரைப்படங்களில் மூலம் சிவாஜி சினிமாவில் தனக்கென தனி இடத்தையும் பிடித்தார். ஆரம்பத்தில் சினிமா துறையின் வளர்ச்சி சற்று குறைவாகவே இருந்தது.

இதையும் வாசிங்க:ஒரு வாய்ப்பும் இல்ல!.. ஆனா லட்சக்கணக்கில் வருமானம்!.. 5 பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!..

ஆனால் காலம் மாற மாற நவீன தொழில்நுட்பங்களும் சினிமாவில் வளர்ந்து வந்தன. ஆனால் அன்றைய காலகட்டத்தில் கூட சிவாஜி நடித்து கொண்டிருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஈடுகட்டியும் நடித்து வந்தார். படையப்பா, லவ் டுடே, பூப்பறிக்க வருகிறோம் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்படங்களும் மக்களிடம் பெரிதளவில் ஈர்ப்பை பெற்றன.

சிவாஜி நடித்த பராசக்தி திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்பட வெற்றிக்குபின் இவர் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக தனது சொந்த செலவிலேயே கலை நிகழ்ச்சி நடத்தி தந்தாராம். இவரின் கலைநிகழ்ச்சி என்றவுடன் இலங்கையில் அந்நிகழ்ச்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி விட்டதாம்.

இதையும் வாசிங்க:கமலை நாயகனாக மாத்துவது இனி உங்கள் பொறுப்பு… பாலசந்தரிடம் சேர்த்து விட்ட பிரபல நடிகர்..!

இந்நிகழ்ச்சியின் போது பராசக்தி திரைப்படத்தின் நீதிமன்ற வசனங்களை பேசுமாறு கூறியுள்ளனர். அவர்களின் ஆசையை ஏற்று சிவாஜியும் மேடையில் அந்த வசனங்களை பேசியுள்ளார். மேலும் அந்நிகழ்ச்சியில் வந்த வருமானத்தை சிவாஜி மேடையிலேயே வைத்து அதன் ஒருங்கினைப்பாளருக்கு கொடுத்துவிட்டாராம். சிவாஜி இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவும் குணமுடையவர் என்பது இந்த சம்பவமே ஒரு எடுத்துகாட்டாகும்.

பின் இந்நிகழ்ச்சிக்கு பின் இவர் தமிழில் திரும்பிபார் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தோல்வி படம் என்றும் சொல்ல முடியாது. பொதுவாக அந்த காலத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது சற்று கடினமான விஷயம்.

ஆனால் சிவாஜியோ அதை நிகழ்த்தி காட்டியுள்ளார். திரும்பிபார் திரைப்படத்தில் இவர் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எதிர்மறையான கதாபாத்திரத்தின் மூலமும் இவர் மக்கள் மனதில் தனக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி கொண்டுள்ளார்.

இதையும் வாசிங்க:அந்தப் பட வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்கா? உண்மையான ஹீரோ இவர்தான் – என்னாச்சு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top