ஜெயலலிதா எங்கிட்ட கடைசியா பேசுன வார்த்தை அதுதான்... நெஞ்சைத் தொட்டுட்டாரே பி.வாசு..!

தமிழ்த்திரை உலகில் இயக்குனர் பி.வாசு தவிர்க்க முடியாதவர். தமிழக அரசின் கலைமாமணி உள்பட பல விருதுகளைப் பெற்றவர் பி.வாசு. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர். இவரது படங்களே இவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லும். சூப்பர்ஸ்டார் ரஜினியின் சந்திரமுகியை யாராவது மறக்க முடியுமா? செம மாஸ் படம்.

ஜெயலலிதா பெயரில் விருது கொடுத்த போது எனக்கு ரொம்பவே சர்ப்ரைஸா இருந்தது என்று சொல்லும் பி.வாசு ஜெயலலிதா அவரிடம் கடைசியாகப் பேசிய தருணங்களையும் நினைவுகூர்கிறார். வாங்க பார்க்கலாம்.

இதையும் படிங்க... தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி ரோல் இவருக்கு தானாம்… அசால்ட்டாக தட்டி தூக்கிய நடிகர்…

அடிமைப்பெண் படத்துல எங்க அப்பா பீதாம்பரம் தான் மேக்கப் மேன். அந்த ராணி வேஷம் போடும்போது எம்ஜிஆர் பீதாம்பரம் அந்த முதல் கெட்டப்புக்கு நீங்க மேக்கப் போட்டுருங்கன்னு சொன்னாராம். அது ஒரு மாதிரி நெகடிவ் கேரக்டர் மாதிரி இருக்கும்.

அப்பவே அப்பா சொல்வார். ஜெயலலிதா ஒரு டால் மாதிரி. யாருடனும் பேச மாட்டாங்க. தனியா உட்கார்ந்து நிறைய நாவல் படிப்பாங்க. வருவாங்க. நடிப்பாங்க. போயிருவாங்க. யாரு கூடவும் மிங்கிளாக மாட்டாங்க. அவங்கக்கிட்ட பேசணும்னு நான் ஆர்வப்பட்டு கேட்டேன். அவங்க கேரக்டர் என்ன? ஸ்பெஷல் என்ன? ஏதாவது ஒரு இடத்துல அவங்களைப் பற்றிப் பேசணும்னா கூட எனக்குத் தெரியாது. அதனால கேட்டேன். கடைசியா அவங்கள எலெக்ஷ்ன் வரப்போகுது. அதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி நான், செல்வமணி, விக்ரமன், ரவிக்குமார் நாலு பேரும் அவங்களைப் போயிப் பார்த்தோம். அப்போ நான் சொன்னேன்.

இதையும் படிங்க... சிவாஜியின் அந்த கெட்டப்புக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவரு யாரு தெரியுமா? அவரே வாயடைத்துப் போனாராம்!..

அம்மா, இந்த மாதிரி நான் பிரசாதம் அனுப்பி வச்சேனே... உங்களுக்குக் கிடைச்சுதான்னு கேட்டேன். வாசு நீ எப்பவுமே இங்க இருக்கீங்கன்னு நெஞ்சைத் தொட்டுக் காட்டினார். அதான் கடைசியா எங்கிட்ட பேசுனது. இத்தனைக்கும் அவங்கக்கிட்ட நெருங்குனது கிடையாது. டெய்லி பேசுனது கிடையாது. கட்சில கிடையாது. அதுக்காக மேடை ஏறினது கிடையாது. எல்லா அரசாங்கத் துறைகளிலும் ஏதாவது ஒரு போஸ்ட்ல என்னைப் போட்டுருவாங்க. திரைப்படத்துறை நலவாரிய சங்கம், டாக்ஸ் ப்ரீன்னு எல்லாத்துலயும் போட்டுருவாங்க.

ஒருமுறை விழா ஒன்றில், பணக்காரன், மன்னன், நடிகன், சின்னத்தம்பி, வால்டர் வெற்றிவேல் என ஒவ்வொரு படங்களிலும் தனித்தனியாக எடுத்தவர் பி.வாசு என்றெல்லாம் பாராட்டுகளைக் குவித்தாராம் ஜெயலலிதா.

 

Related Articles

Next Story