வைரமுத்துவுடன் போட்டி போட்ட ஏ.ஆர்.ரகுமான்!.. ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!.. செம அப்டேட்!..

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய், பிரசாந்த் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஒரு காதல் பாடல் வேண்டும் என இயக்குனர் ஷங்கர் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கேட்டாராம். உலக அழகி நடித்துள்ளார் என்றதுமே உலக அதிசயங்கள் பற்றி வைரமுத்து காதலுடன் கலந்து எழுதித் தள்ளி விட்டாராம்.

அதுதான் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்... என்ற பாடல். பாடல் முழுக்க அதிசயம் அதிசயம் என்று வரும். முதல் சரணத்தில் வாசனை இல்லா கிளையின் மேல் வாசமுள்ள பூ அதிசயம். உடலில் உயிர் எங்குள்ளது என்பது அதிசயம். அதில் காதல் எங்குள்ளது என்பதும் அதிசயம் என முதல் சரணத்தை இயற்கையோடு கலந்து முடித்திருப்பார்.

Jeans

Jeans

இந்தப் பாடலில் வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் என்ற வரி கவிஞரின் கற்பனை நயத்தைக் காட்டுகிறது. அதே போல அலைகடல் தந்த மேகத்தில் சிறு துளி கூட உப்பில்லை... மழை நீரும் அதிசயமே என்கிறார். நிஜமாகவே அதிசயம் தானே என எண்ணத் தோன்றுகிறது.

2வது சரணத்தில் உடலின் அங்கங்களை வர்ணித்து இருப்பார். நங்கை கொண்ட விரல்களும், நகம் என்ற கிரீடமும் அதிசயம். அசையும் வளைவுகளும் அதிசயம் என்று முடித்திருப்பார் வைரமுத்து. இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரகுமான் இயற்கையும், செயற்கையும் கலந்து பண்ணியிருப்பார்.

புல்லாங்குழலை வெகு அழகாக வாசித்திருப்பார். வெஸ்டர்ன் மியூசிக்கும் அனாயாசமாக இருக்கும். இந்தப் பாடல் ரெக்கார்டிங் ஆகி முடிந்து விட்டது. ஏ.ஆர்.ரகுமானும், வைரமுத்துவும் பாடலை சிறப்பாக உருவாக்கி கலக்கி விட்டார்கள். நாம் எப்படி காட்சிப்படுத்துவது என யோசிப்பார். இந்தப் படத்தில் அதிசயம் என்றதுமே 7 உலக அதிசயங்களையும் காட்டி இருப்பார். நேரடியாக அங்கு சென்று அங்குள்ள கலாச்சார உடைகளையே அணிந்து ஆடச்செய்திருப்பார்.

இதையும் படிங்க... பல்ப் வாங்கிய பாட்டை ஹிட்டடிக்க ஆசைப்பட்ட விஜய் ஆண்டனி… தளபதி படத்தில் நடந்த தில்லாலங்கடி…

ஷங்கர் பாடலை வைரமுத்துவுக்கு காட்டியதும் கவிப்பேரரசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்ததாம். அந்த சந்தோஷத்தில் பட்டாடையும், சந்தனமாலையும் ஷங்கருக்குப் பரிசாகக் கொடுத்து கௌரவித்தாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story