சோலி முடிஞ்சு!.. அனிமல் படத்தின் ரன் டைம் இவ்ளோவா.. இதுல ரெண்டு இங்கிலீஷ் படம் பார்த்துடலாம்!..

Published on: November 18, 2023
---Advertisement---

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே அலற விட்ட இயக்குநர் சந்திப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

Also Read

இதையும் படிங்க: பாகுபலி படத்துக்கு செஞ்சதை விட!.. கங்குவா படத்துக்கு ஒரு பெரிய விஷயம் பண்ணியிருக்கோம் – மதன் கார்கி!..

அந்த படம் தமிழில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யா வர்மா என வெளியானது. தமிழில் அந்த படம் சரியாக ஓடவில்லை. இயக்குநர் பாலா அந்த படத்தை தான் முதலில் துருவ் விக்ரமை வைத்து வர்மா எனும் டைட்டிலில் உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இந்தியில் கபீர் சிங் எனும் டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்ட அந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி படம் வசூல் செய்ததை விட 4 மடங்கு அதிகமாக 400 கோடி வரை பாலிவுட்டில் வசூல் செய்தது.

இதையும் படிங்க: பச்சை புடவை உத்துப் பார்க்குது!.. பார்வையாலே போதை ஏத்தும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!..

உடனடியாக பாலிவுட்டில் சந்தீப் ரெட்டி வாங்கவை ரன்பீர் கபூர் கொத்தாக தூக்கிக் கொண்டார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூ, ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அனிமல் திரைப்படத்தின் டீசர் வெளியான போதே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் ரன் டைம் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதற்கு காரணம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் அனிமல் படம் ஓடும் என்பது தான். 2.30 மணி நேரத்தை தாண்டி 2.50 நிமிடங்கள் படம் இருந்தாலே ரொம்ப லெந்த் என்றும் படம் இழுவையாக இருக்கும் என்றும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், 3 மணி நேரத்தை தாண்டி கிட்டத்தட்ட 3.20 மணி நேரம் என்றால் அந்தளவுக்கு வொர்த்தாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.