பாகுபலி படத்துக்கு செஞ்சதை விட!.. கங்குவா படத்துக்கு ஒரு பெரிய விஷயம் பண்ணியிருக்கோம் - மதன் கார்கி!..

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, சத்யராஜ், நாசர், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்த பிரம்மாண்ட பாகுபலி படத்திற்காக மதன் கார்கி புதிதாக காலகேயர்கள் பேசும் மொழியையே உருவாக்கி இருந்தார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படத்தில் நாவி எனும் புதிய மொழியை உருவாக்கியிருந்தனர். பாகுபலி படத்திற்காக மதன் கார்க்கி கிளிக்கி எனும் மொழியை உருவாக்கியிருந்தார்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருக்கவங்க மட்டும் பாருங்க!.. ஈரம் சொட்ட சொட்ட அழகை காட்டும் பிரக்யா நாக்ரா..

இந்நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்திற்கும் பணியாற்றி வரும் மதன் கார்க்கி சூர்யாவின் பீரியட் போர்ஷன் ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்றும் புதிதாக நிலம், மாந்தர்கள், வட்டார வழக்கு என பல விஷயங்களை செய்துள்ளோம் என்றும் அனைத்தையும் விட புதிதாக ஒரு கடவுளையும் உருவாக்கி உள்ளோம் என சமீபத்திய பேட்டியில் கூறி படத்துக்கான ஹைப்பை அதிகரித்துள்ளார்.

நடிகர் சூர்யா எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் தான் எழுதிக் கொடுத்த வட்டார வழக்கை அப்படியே ஏற்றுக் கொண்டு பேசியிருப்பது தன்னை வியப்பில் ஆழ்த்தியது என்றும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பார்க்கும்போது ஒன்றை விட ஒன்று சிறப்பாகவும் வேறு ஒரு உலகத்துக்கு நம்மை கொண்டு செல்வதுமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன்!. சிவாஜி நடிக்க மறுத்த ஹிட் படம்!.. அப்புறம் நடந்ததுதான் டிவிஸ்ட்..

அடுத்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி, தளபதி 68, தலைவர் 170 உள்ளிட்ட படங்கள் சம்மரில் மோதும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதல் வெடிக்கும் என தெரிகிறது.

ஒவ்வொரு படங்களும் குறைந்தது 2 வார இடைவெளியில் வெளியானால் தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story